
புதுடில்லியில் மாணவர் போராட்டங்களை ஒடுக்க இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) வெளிப்படையாகக் கவலை தெரிவித்துள்ளது.
அமைதியான போராட்ட உரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைச் சுவாசம் என அவர்கள் வலியுறுத்தினர். நூற்றுக்கணக் கான மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர் கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப் பட்டது, உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் தேர்தல் ஆணையம் மேற் கொண்ட வாக்காளர் பட்டியல் திருத்தம், கோடிக்கணக்கான பெயர்கள் நீக்கப் பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
இதற்கு எதிராக மாணவர்கள் “ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையுடன் தெருக்களில் குரல் கொடுத்தனர்.
ஆனால், காவல்துறையும் துணை இராணு-வமும் மாணவர் போராட்டத்தை எதிர் கொள்ள கடுமையான நடவடிக்கைகள மேற்கொண்டன.
இந்தியாவின் தலைநகரத்தில் இணைய சேவை முடக்கம், நூற்றுக்கணக்கான இரயில் சேவை நிறுத்தம், வெளி மாநிலங்-களில் இருந்து தலைநகர் புதுடில்லியை நோக்கி வரும் ரயில்களும் நிறுத்தம், பேருந்து போக்குவரத்து- வாடகை வாகன போக்குவரத்து யாவும் முடக்கம் என்றெல்-லாம் பாரதூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு போராட்டத்தை அடக்க முயன்றன.
இந்த சூழ்நிலையில் தான், ஐ.நா. ஐநா மன்றத்தின் மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது:
‘தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்’ என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மோடி தலைமையிலான இந்திய அரசு “உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடு’ எனக் கூறி, தன் வெட்கங்கெட்ட தனத்தை தானே பறைசாற்றிக் கொண்டுள்ளது
இந்தச் சம்பவம், இந்தியாவின் ஜனநாயக உரிமைகள், மாணவர் இயக்கங்கள், மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆகியவற்றின் இடையிலான உறவை மீண்டும் சிந்திக்க வைக்கிறது.

கடந்த 12 ஆண்டுகளாக நாட்டில் நிலவும் ஆபத்தான தீவிரமான சூழலை மோடி அரசாங்கம் எதிர்கொண்டு சமாளித்து வருகிறது என்று பாஜக தலைவர் நிதின் நவின் குறிப்பிட்டுள்ளதே தக்க சான்று.
மாணவர் குரல் அடக்கப்படும்போது, அது அது மீண்டும் மீண்டும் வீரியத்துடன் எழுச்சி பெறும் என்பதை மோடி தலைமையிலான பாஜக அரசு எண்ணிப் பார்க்க தவறிவிட்டது.


