Thursday, October 15, 2026

மலேசிய குற்றத் தடுப்பு அறவாரிய உதவித் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் ஆ. தெய்வீகன் நியமனம்!

மலேசிய குற்றத்தடுப்பு அறவாரியத்தின் தலைவரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன், நேற்று சில முக்கிய பொறுப்புக்களுக்கான நியமனங்களை அறிவித்தார்.

தேசிய குற்றத் தடுப்பு அறவாரியத்தின் மூன்று உதவித்தலைவர்களில்ஒருவராக, காவல்துறை மேனாள் ஆணையர் டத்தோஸ்ரீ Dr.தெய்வீகன் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதும் அத்தகைய நியமனங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று.

டத்தோஸ்ரீ கிங் லிம், டத்தோ முகமது ஃபுவாட் இருவரும் மற்ற இரு உதவி தலைவர்கள்.

தவிர, 15 மேலவை உறுப்பினர்களுக்கும் சிறப்பு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இவர்களில் டத்தோஸ்ரீ புலவேந்திரனும், டத்தோ ஜெயமலரும் அடங்குவர். கல்வித் துறை, மாணவர்கள், போதைப்பொருள், குற்றவாளிகள், சிறைச்சாலை, பன்னாட்டு மனிதக் கடத்தல், பெண்கள்/ சிறார்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகள் சார்ந்து இந்த நியமனங்கள், 2029 வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை