Thursday, October 22, 2026

மு.க.ஸ்டாலினும் ரஜினி காந்தும் உறவினர் ஆகின்றனர்: அரசியல்-கலைக் குடும்பங்கள் சம்பந்தம்

பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள் தாங்கள் என்று ஆரிய வம்சத்து பிராமணர்கள் மார்தட்டிக் கொண்டாலும், புகழுக்குரியவர்களையும் பணம் படைத்தவர்களையும் திருமண பந்தத்தின்மூலம் தன்வயப்படுத்த பிராமணர்கள் ஒருநாளும் கூச்சப்படுவதில்லை.

அந்த வகையில் கலைஞர் முகருணாநிதியின் குடும்பத்துடன் பிராமணக் குடும்பம் திருமண உறவின்வழி இணையும் இன்னோர் அத்தியாயம் படைக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் மனசாட்சியைப் பொன்ற அவரின் அன்பு மருமகன் முரசொலி மாறன் ஒரு பிராமணப் பெண்ணை மணந்ததன் மூலம், இந்த அத்தியாயம் ஏற்கெனவே உருவாகிவிட்டது.

இப்பொழுது அதே முரசொலி மாறனின் பெயர்த்தி காவியாவும் இசை அமைப்பாளர் அனிருத்தும் திருமணம் புரிய இருப்பதன்மூலம் இந்த அத்தியாயம் புதுப்பிக்கப்படுகிறது.

எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, காக்கி சட்டை, மாரி, வேதாளம், தங்க மகன், விவேகம், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட அதிகமான படங்களுக்கு இசை அமைத்துள்ள அனிருத் பாடகருமாவார்.

கலைஞரின் குடும்பம் அரசியல் குடும்பமாக இருந்தாலும், அடிப்படையில் அதுவும் ஓர் இசைக் குடும்பம்தான்; மொத்தத்தில் இரு இசைக் குடும்பங்கள் திருமண உறவின்வழி சங்கமிக்கின்றன.

தமிழ்நாட்டில் சன் குழுமத்தைச் சேர்ந்த காவ்யா மாறன் – திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரின் திருமணம் தற்பொழுது, பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்தத் திருமண உறவின் மூலம் மு.க.ஸ்டாலின் – மாறன் குடும்ப வட்டமும் தமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமான ரஜினிகாந்தின் குடும்பமும் இணைகின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் உள்ளிட்டோருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி அழைப்பிதழை மணமகளின் பெற்றோரான சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனும் அவரின் மனைவி காவேரியும் நேரில்
வழங்கி வருகின்றனர்.
மணமகள் காவ்யா மாறனுக்கு, மு.க.ஸ்டாலின் தாத்தா ஆவார்.
காவ்யா கலாநிதி மாறன், சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளராகவும் விளங்குகிறார்.

காவியா, 2016ஆம் ஆண்டில் சன் டிவி நிறுவனத்தில் இணைந்தார். 2019ஆம் ஆண்டில் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
கலாநிதி மாறனின் தந்தை, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆவார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சகோதரியின் மகன் முரசொலி மாறன் ஆவார். அந்த வகையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் உறவினர்கள்.
அனிருத், ரஜினியின் மருமகன் எனபது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரையுலகின் முன்னிலை இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர், 2012ஆம் ஆண்டு வெளியான ‘3’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது இசையில் ‘ஒய் திஸ் கொலவெறி டி’ என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து விக்ரம், லியோ, ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அனிருத், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவின் சகோதரரின் மகன் ஆவார். அனிருத் ரவிச்சந்தரின் தந்தை ரவி ராகவேந்திரா ஒரு திரைப்பட நடிகராவார். குடும்ப உறவோடு மட்டுமல்லாமல், அனிருத் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் தொழில் ரீதியிலும் இணைந்து பணியாற்றியுள்ளனர். பேட்ட, தர்பார், ஜெயிலர் உள்ளிட்ட ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதன் அடிப்படையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் இந்நாள் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும் உறவினர் ஆகின்றனர்.
தமிழ்நாட்டின் இரண்டு பாரம்பரிய குடும்ப வட்டங்கள் இந்த திருமண உறவின் மூலம் இணைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது; ஒருபுறம், மணமகள் காவ்யா மாறன் கருணாநிதி – முரசொலி மாறன் குடும்ப மரபுடன் தொடர்புடையவர். மறுபுறம், அனிருத் ரவிச்சந்தர் ரஜினிகாந்தின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்.
இதன் மூலம், ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் குடும்பங்கள் விரிவடைந்த குடும்ப உறவுகளின் வழியாக ஒரே குடும்ப வட்டத்தில் இணைகின்றன.

சன் டிவி குழும மதிப்பு எவ்வளவு தெரியுமா?
‘சன் டிவி நெட்வொர்க்’ இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். தொலைக்காட்சி, வானொலி, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், அச்சு ஊடகங்கள் மற்றும் விளையாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல துறைகளில் அதன் செயல்பாடுகள் பரவியுள்ளன.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஏழு மொழிகளில் 37 தொலைக்காட்சி அலைவரிசை, 69 எஃப்எம் வானொலி நிலையங்கள், 14 கோடிக்கும் அதிகமான வீடுகளை எட்டும் பார்வையாளர் வலையமைப்பு என பரந்துபட்டக் கட்டமைப்பை ‘சன் டிவி நெட்வொர்க்’ கொண்டுள்ளது. சன் நெக்ஸ்ட் (Sun NXT) ஓடிடி தளம் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியும் அதன் வணிகப் பிரிவுகளாகும்.
சன் டிவி நெட்வொர்க் மொத்த சந்தை மூலதன மதிப்பு (2026 அக்டோபர் 19ம் நாள் நிலவரப்படி) ரூ.25,219.45 கோடி ஆகும்.
நிறுவனத்தின் 2024-25 நிதியாண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கையின்படி, அதன் மொத்த வருவாய் 4,543.96 கோடி ரூபாயாகவும் வரி செலுத்திய பிறகான நிகர லாபம் 1,654.46 கோடி ரூபாயாகவும் இருந்தது. இந்தப் புள்ளிவிவரங்கள் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகளின் அளவை உணர்த்துகின்றன.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை