Tuesday, October 27, 2026

நாக்பூர் நகர்வு: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகை திரிஷா களமிறக்கப்படுகிறார்(?)!

தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பரவிவரும் ஊகத் தகவலாலும் சமூக வெளியில் பரவும் பரபரப்பு செய்தியாலும் திருச்சி கிழக்குத் தொகுதி யில் நடிகை திரிஷா களம் இறக்கப்படுகிறாரோ என்ற அரசியல் பார்வை எழந்துள்ளது.

இந்த சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அந்தத் தொகுதியில் பிரபல நடிகை திரிஷா போட்டியிடக் கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதுவரை இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் அண்மைக்காலமாக நடிகை திரிஷா மேற்கொள்ளும் பொது நிகழ்ச்சி பங்கேற்புகள் பல்வேறு அரசியல் ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

குறிப்பாக, அண்மையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவையொட்டி ஏற்பட்ட மக்கள் திரளும் வாகன பேரணிக் காட்சிகளும் அரசியல் ஆர்வளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான நடிகர் விஜய் மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலத்தில் பிரபல முகங்களை அரசியல் களத்தில் அறிமுகப்படுத்துகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் திரிஷாவின் பெயர் அடிக்கடி பேசப்படுவதால், திருச்சி கிழக்கு தொகுதி தொடர்பான ஊகங்கள் மேலும் வலுப்பெற்று வருகின்றன.

எனினும், திரிஷா அரசியலுக்கு வருகிறார் என்றும், அவர் குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் தற்போது வெளியாகவில்லை.

சம்பந்தப்பட்ட தரப்புகளும் இதுகுறித்து எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

ஒருவேளை இந்த நகர்வு உண்மையாக இருந்தால் இது அநேகமாக புதுடில்லியின் நகர்வாகத்தான் இருக்கும்.

தமிழ்நாட்டில் திராவிட சித்தாந்தம்- திராவிட ஆட்சி ஆகியவற்றை விரும்பாத பாஜக, விஜய்யை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி அவர் மூலம் தன் எண்ணத்தை நிறைவேற்றி வருகிறது.

தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது; தமிழ் மாணவர்களின் கல்விக் கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் 12 ஏக்கர் நிலம் இருந்தால் பல்கலைக்கழகம் தொடங்கலாம் என்று விஜய் போட்ட உத்தரவு போன்ற நடவடிக்கைகள் அதற்கான தக்க சான்றாகும்.

பாஜகவிற்கு தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்பதால் நடிகர் விஜய்யின் திரைப்பட கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு காய் நகர்த்துகிறது. ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் பீடத்தின் அரசியல் முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.

திராவிட இயக்கத்தை பொருத்தவரை பிராமண மேலாதிக்கத்தை எதிர்ப்பது அதன் தலையாய கொள்கை; ஆனாலும் திராவிட இயக்கத்தில் இருந்தே ஜெயலலிதா என்ற பிராமண பெண் தமிழ்நாட்டை ஆள நேர்ந்தது. அவரும் தன்னை ஒரு பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலே வெளிப்படையாக அறிவித்துக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில் விஜய்யும் திரிஷாவையும் வைத்து பாஜக ரகசிய அரசியல் நகர்வு மேற்கொள்கிறதோ என்று கருத வேண்டி இருக்கிறது.

புதுடில்லி பாஜக அரசு மேற்கொண்ட அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு பிறகு ஜோசப் விஜய் பாஜகவிற்கு பெட்டி பாம்பாக அடங்கி விட்டார். இதன் அடிப்படையில் அவரை வளைத்து அவர் மூலம் தன்னுடைய எண்ணங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றி வரும் ஆர்எஸ்எஸ் பாஜக தரப்பு, அதே பிராமண குலத்தைச் சேர்ந்த திரிஷாவையும் அரசியலில் இறக்கி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் எதிர்கால திட்டத்தை கைக்கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பார்வையும் எழுந்துள்ளது.

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னிலை நடிகராக இருந்த சோபன்பாபு உடன் ஜெயலலிதா தனிப்பட்ட உறவில் இருந்தார். சோபன் பாபுவிற்கு மனைவி மக்கள் அடங்கிய குடும்பம் இருந்தும் ஜெயலலிதா இதை செய்தார். அதை ஒரு வார இதழில் எழுதிய தொடரில் ஜெயலலிதாவே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

ஏறக்குறைய அதைப் போலவே விஜய்க்கு மனைவி மக்கள் என குடும்பம் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல மணமாகாத திரிஷா, விஜய்யுடன் நட்பு பாராட்டுவதும் நெருக்கம் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

திரிஷா அண்மையில் கோயம்புத்தூரில் நடத்திய ‘ரோட் ஷோ’ இவை அனைத்திற்குமான வெள்ளோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை