Tuesday, October 27, 2026

‘கோலாலம்பூர் லிட்டில் இந்தியா’வை உருவாக்கியது டத்தோஸ்ரீ நஜீப்: -டத்தோஸ்ரீ சரவணன் புகழ்ச்சரம்!

கிள்ளான் பள்ளத்தாக்குவாழ் இந்தியர்களுக்கு மிகவும் பரிச்சயமான கோலாலம்பூர், பிரிக் ஃபீல்ட்ஸ் வட்டாரத்தை பாரம்பரிய வர்த்தக மையமாக லிட்டில் இந்தியா’ என்னும் பெயரில் உருவாக்கியது அந்நாளைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ மு. சரவணன் புகழ் மாலை சூட்டினார்.

சீனர்களுக்கு சீன சந்தை இருப்பதைப் போல தமிழர்களுக்கும் பாரம்பரிய சந்தையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே தனக்கு இருந்ததாகவும் அதை அரசியல் பயணத்தின்மூலம் நிறைவேற்ற முடிந்ததாகவும் இன்று பிரிக் ஃபீல்ஸ் லிட்டில் இந்தியா 16வது ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய பொழுது அவர் குறிப்பிட்டார்.

“2008 பொதுத்தேர்தலுக்கு பிறகு கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சராக இருந்த பொழுது அப்பொழுது துணைப் பிரதமராக இருந்த டத்தோஸ்ரீ நஜீப்பிடம் இதன் தொடர்பில் கோரிக்கை வைத்ததாகவும் அது குறித்து நேரம் வரும் பொழுது ஆவண செய்வோம் என்று உடனே என்ன நஜீப் ஒப்புதல் அளித்ததாரா” குறிப்பிட்ட சரவணன்,

அடுத்த ஆண்டு 2009இல் நஜீப் பிரதமர் ஆனதும் முதல் தீபாவளி சமயத்தில் பிரதமர் நஜுப்பை அழைத்து வந்து பிரிக் ஃபீல்ஸ் வட்டாரத்து தீபாவளி சந்தையை சுற்றி காண்பித்ததுடன் இந்தப் பகுதியை லிட்டில் இந்தியா வர்த்தக மையமாக உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக சரவணன் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு மாதத்தில் இந்தியாவுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டு திரும்பியபின் பிரதமர் தன்னை அழைத்து இந்தியாவில் இந்திய பயணத்தின் பொழுது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததாகவும் அவர் கோலாலம்பூர் லிட்டில் இந்தியா கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் இன்னும் இரண்டு மாத காலத்தில் இது கட்டி முடிக்கப்பட வேண்டும் என்றும் நஜீப் தன்னிடம் தெரிவித்ததாக சரவணன் மேலும் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மாதத்தில் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கோலாலம்பூருக்கு வர இருப்பதாகவும் அப்பொழுது நானும் அவரும் சேர்ந்து கோலாலம்பூர் ஊர் லிட்டில் இந்தியாவை திறந்து வைக்க இருக்கிறோம் என்று நஜிப் சொன்ன செய்தி நெஞ்சத்தில் தேனாக பாய்ந்தது என்று சரவணன் குறிப்பிட்டார்.

இத்தகைய லிட்டில் இந்தியாவில் முன்னதாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீபாவளி வர்த்தக பகுதியை சுற்றிப் பார்த்த பின் செய்தியாளர்களிடம் சரவணன் பேசினார்.

“இது வியாபாரம் மட்டுமல்ல:
நம் கலாச்சாரமும்கூட” என்று
டத்தோஸ்ரீ சரவணன் அப்போது குறிப்பிட்டார்.

2026 தீபாவளித் திருநாளை முன்னிட்டு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தீபாவளி சந்தைப் பகுதி வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ மு. சரவணன் இன்று வருகை மேற்கொண்டார்.

இந்த வணிகப் பகுதி பெரும்பொருள் செலவிலும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டுள்ளதற்காக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ’விற்கு பாராட்டும் நன்றியும் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

இருந்தபோதும் இந்த இடம் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற வகையில் இல்லை.
தற்போதைய இரவு நேரத்திலேயே இங்கு நீண்ட நேரம் நிற்க முடியாத அளவிற்கு வெப்பமாக இருக்கின்ற நிலையில் பகல் நேரத்தில் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் ஒதுக்குப்புறமான இந்த இடத்திற்கு எப்படி வருவார்கள் என்று அவர் வினவினார்.

தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன் நடைபெறும் வியாபாரம்தான், ஓர் ஆண்டுக்கு தாக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்; காரணம் மற்ற சமயங்களில் இந்த அளவுக்கு இது போன்ற ஆடை பலகார வியாபாரம் இருக்காது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் யாருமே வராத இந்த இடத்தில் இவ்வளவு பொருள் செலவில் இந்த வர்த்தக கட்டமைப்பை ஏற்படுத்தி யாருக்கு என்ன பயன் என்று தெரியவில்லை.

இந்த இடத்தில் பாரம்பரியமாக வியாபாரம் செய்யும் வர்த்தகர்களின் கருத்தை கேட்டு அதற்கு ஏற்ப இந்த ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும்.

முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும்; தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அனைத்து வியாபாரிகளும் சாலையோரங்களில் கூடாரம் அமைத்து தங்கள் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இதன் தொடர்பில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சரவணன் கேட்டுக்கொண்டார்.

இந்த கோரிக்கைக்கு வியாபாரிகள் அனைவரும் ஆதரவு தெரிவித்து மகிழுந்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை