Tuesday, November 24, 2026

பத்துமலையில் முப்பெரும் விழா!

கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் முப்பெரும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நூல் வெளியீடு, நகைச்சுவை பட்டிமன்றம், புதிய நூலகம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த முப்பெரும் விழாவில் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

பத்துமலை ஆலய வளாகத்திற்கு அருகில் உள்ள புதிய கட்டிடத்தில் முழு நாள் நிகழ்ச்சி-யாக இந்த முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தமிழ் இலக்கிய உரைகள், நகைச்சுவை பட்டிமன்றம், கவியரங்கம், பரதநாட்டிய, இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன.

இங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகம், பத்து மலை ஆன்மீக தலத்திற்கு , ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்.

‘கோயில் என்பது வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அறிவையும் பண்பாட்டையும் வளர்க்கும் மையமாகவும் திகழ வேண்டும்’ என்ற நோக்கத்தை பிரதிபலிக்கும் வகை யில் இந்த முப்பெரும் விழா அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட டத்தோஸ்ரீ மு சரவணன் ‘கடாரம் கொண்டான்’ நூலை வெளியீடு செய்து சிறப்புரை ஆற்றினார்,

மலேசிய இந்தியர்களின் 200 ஆண்டுக்கால வரலாறுகளை பதிவு செய்ய மலேசிய இந்திய ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ள தாக சரவணன் தெரிவித்தார்.

தேவஸ்தான அறங்காவலர் டத்தோ சிவக் குமார் தலைமையில்திருக்குறள் கணினிப் பெட்டகமும் திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் மொழி, இலக்கியம், வாசிப்புப் பண்பாட்டை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் பொதுமக்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.

டான்ஸ்ரீ நடராஜாவிற்கு மாலை அணிவித்து விழாவைத் தொடக்கி வைத்ததைப் போல, நன்றி உரை நிகழ்த்தி நிறைவு செய்தவரும் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை