Monday, November 23, 2026

பிரிமாஸ் தேர்தல்: பொருத்தமான தலைவரைத் தேர்ந்தெடுங்கள்! -தான்ஸ்ரீ துரைசிங்கம்!!

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்-பிரிமாஸ் அமைப்பிற்கு நாளை மறுநாள் புதன்கிழமை நவம்பர் 25-ஆம் நாள் ஆண்டுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இது, தேர்தல் ஆண்டுக் கூட்டம் என்பதால், பிரிமாஸ் அமைப்பிற்கு புதிய நிருவாகம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது.

பிரிமாஸ் நடப்பு துணைத் தலைவர் சி.
கிருஷ்ணன் தலைமையில் ஓர் அணியும் (Team -1) நடப்பு உதவித் தலைவர் முனைவர் சின்னையா (எ) சீனு தலைமையில் இன்னோர் அணியும்(Team 2) போட்டி இடுகின்றன.

இதன் தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், “இரு அணியினருமே தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்றும் பிரமாஸ் அங்கத்தினர்கள் பொருத்தமான தரப்பினரை தேர்ந்தெடுக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

உணவக தொழில் சங்கமான பிரிமாஸ் அமைப்பிற்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெற்று தலைமைப் பொறுப்புக்கு வந்தாலும், அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒரே குழுவாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று இந்த அமைப்பின் புரவலரும் லோட்டஸ் குழுமத்தின் தலைமை இயக்குநருமான தான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் வலியுறுத்தினார்.

வரும் 25ஆம் தேதி புதன்கிழமை சுபாங் ஜெயா டொர்செட் தங்கும் விடுதியில் நடைபெறவுள்ள பிரிமாஸ் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் தொடர்பில் கருத்துரைத்த அவர், இம்முறை இரண்டு அணிகள் தேர்தலில் களமிறங்கி யுள்ள நிலையில், உறுப்பினர்கள் சங்கத்-தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

சங்க உறுப்பினர்களின் தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள வேண்-டுமானால், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவது மிகவும் அவசியமாகும்.

தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் அன்றி, தோல்வியடைபவர்களும் சங்கத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்ற வேண்டும்.

சங்கத்திற்காகச் சிறப்பாகச் செயல்பட்டு வருபவர்களையும், தொடர்ந்து சேவையாற்றி வருபவர்களையும் உறுப்பினர்கள் அடை யாளம் கண்டு தங்களின் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிரிமாஸ் சங்கம் உருவாக்கப்பட்ட காலக் கட்டத்தில் அன்றைய மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலு பெரும் ஆதரவும் உதவியும் வழங்கியதை நினைவுகூர்ந்த தான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், சங்கத்தின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் ஒற்றுமை அடிப்படையானது என்றார்.

சங்கத்தின் விதிமுறைகளின்படி ஒருவர் அதிகபட்சம் இரண்டு தவணைகள் மட்டுமே தலைவர் பதவியை வகிக்க முடியும். அத-னால் நடப்புத் தலைவரான இவர், பதவி விலக்குகிறார்.

இம்முறை தலைவர் பதவி மட்டுமன்றி, துணைத் தலைவர், உதவித் தலைவர், கௌரவ செயலாளர், பொருளாளர் ஆகிய ஐந்து முக்கிய பதவிகளுக்கும் போட்டி நடைபெறுகிறது.

எனவே, தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்-தாலும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், பிரிமாஸ் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சியையும் உறுப்பினர்-களின் நலனையும் முன்னிறுத்தி அனை-வரும் ஒரே அணியாகச் செயல்பட வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, தலைவர் பதவிக்குப் போட்டி யிடும் சி.கிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார்.

பிரிமாஸ் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தனிப்பணிக்குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

உணவகத் துறையில் நிலவும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை இப்பணிக்குழு முன்னெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், பிரிமாஸ் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக நாடு தழுவிய அளவில் உள்ள உணவக உரிமையாளர்களை நேரடியாகச் சந்தித்து, குறிப்பாகப் புதிதாக உணவகத் தொழிலைத் தொடங்கியுள்ள உரிமையாளர்களைச் சங்கத்தில் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

அதேபோன்று, அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மூலம் உணவக உரிமையாளர் களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் சலுகைகளை முழுமையாகக் கண்டறிந்து, அவற்றைச் சங்க உறுப்பினர் கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சங்கத்தின் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பதுடன், உணவகத் துறையின் வளர்ச்சிக்கும் சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சி.கிருஷ்ணன் கூறினார்.

மேற்கண்டவற்றை அவர் தனது தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை