Wednesday, November 18, 2026

கடைசிநேர உணவுக் கூடை வேண்டாம்: -இந்தியருக்கான அமைச்சரவைக் குழுதான்(ICC) வேண்டும்! -டத்தோ ராமநாதன்..!

மலேசிய இந்திய சமுதாயத்தின் உரிமையை நிலைநாட்டவும் தேவையானவைக் குறித்து ஒற்றுமை மடானி அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கவும் இந்தியர்களுக்கான அமைச்சரவைக் குழு உடனடியாக அமைக்க வேண்டும்; மாறாக கடைசி நேர உணவு கூடையை(Bakul Makanan) மலேசிய இந்திய சமுதாயம் எதிர்பார்க்கவில்லை என்று டத்தோ ராமநாதன் கூறினார்.

அண்மைக் காலமாக தீபகற்ப மலேசியாவில் நடைபெற்ற மூன்று மாநில சட்டமன்றத் தேர் தலில் மக்கள் நீதிக் கட்சி பி கே ஆர் மிகவும் மோசமான தோல்வியை வரிசையாகத் தழுவியது.

தவிர இதற்கு முன்னதாக போர்னியோ மண்டலத்து சபா மாநில சட்டமன்றத் தேர்த லிலும் பி கே ஆர் மோசமான பின்னடை- வையே சந்தித்தது.

இதற்கெல்லாம் காரணம் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு உரிய பங்களிப்பு மடாணி அரசாங்கத்தில் வழங்கப்படவில்லையா அல்லது மடாணி ஒற்றுமை அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களும் நடவடிக்கை களும் இந்திய சமுதாயத்தை சென்று சேரவில்லையா என்பது தெரியவில்லை.

ஆனாலும் அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் அமைச்சர் ஒருவர், இந்த பி கே ஆர் கட்சியின் மூத்த தலைவர்களை ஒருங்கிணைத்து அர- வணைப்பதில்லை என்பதும் ஒரு காரணம்.

கடந்த நூற்றாண்டின் நிறைவுக் கட்டத்தில் ‘பி கே ஆர்’ கட்சி தொடக்கக் காலத்தில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை பி கே ஆர் கட்சியில் சேர்ந்து கட்சிக்கு வலுவூட்டிய இந்திய சமுதாயத்தின் மூத்த தலைவர்கள் கண்டுகொள்ளப்படவில்லை; அதைப்போல மித்ரா நிதியை பற்றி அறிவிப்புதான் வருகின்றதேத் தவிர அது யார் யாருக்கு எந்தெந்த வகையில் சேர்ந்தது என்ற விவரம் வெளிப்படையாகத் தெரியவில்லை

மித்ரா நிர்வாகக் குழுவினர் ஜொகூருக்கு சென்றிருக்கிறார்களா? நாட்டின் வடபகுதி கெடா மாநிலத்திற்கோ அல்லது பினாங்கு மாநிலத்திற்கோ சென்று இந்திய சமுதாய வட்டார த் தலைவர்களையும் பொது மக்களையும் சந்தித்திருக்கிறார்களா? சமுதாய அளவில் யார் யாருக்கு எந்தெந்த அளவில் சேவை செய்திருக்கிறார்கள்? எந்தெந்த அமைப்பிற்கு எவ்வளவு மானியம் வழங்கப்பட்டது என்ற விவரம் எல்லாம் எதுவும் தெரியவில்லை.

இதற்கெல்லாம் சரியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றால் ஐசிசி-Indian Cabinet Commitee அமைக்கப்பட வேண்டும்.

எதுவாக இருந்தாலும் மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் ஒற்றுமை- மடாணி அரசாங்கத்திற்கும் ஐசிசி பாலமாக இருக்கும். சமுதாயத்தின் கோரிக்கைகளை உரிய முறையில் அரசத் தரப்பிடம் தெரி விக்கும் அதேவேளை, அரசாங்கம் மேற் கொள்ளும் நடவடிக்கைகளை உடனுக்குடன் இந்திய சமுதாயத்திற்கு சேர்க்கும் பணியையும் ஐசிசி மேற்கொள்ளும்.

எனவே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கம் ஐசிசி-ஐ உடனடியை அமைக்க வேண்டும்.

எதுவாக இருந்தாலும் இதன் தொடர்பில் டிசம்பர் 5ஆம் நாள் புத்ராஜெயாவில் பிரதமரை நேரில் சந்திக்க இருக்கின்றோம் என்றெல்லாம் இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிரபல உணவகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ராமநாதன் மேலும் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை