Sunday, November 15, 2026

மலாக்காவில் தேசிய முன்னணி அபார வெற்றி: -மக்கள் சக்தி கட்சி பாராட்டு!

மலாக்கா சட்டமன்றத்திற்கு நேற்று நடை பெற்ற தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றுள்ளதற்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி மனதார பாராட்டுகிறதென்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்-திரன் தெரிவித்துள்ளார்.

தீபகற்ப மலேசியாவில் ஜோகூரில் எழுந்த நீல அலை, அடுத்து நெகிரி செம்பிலான் மாநிலத்திற்குப் பரவி, தற்பொழுது மலாக்கா மாநிலத்திலும் வலுவாக எழுந்துள்ளது.

நாட்டை நிலைத்தன்மையுடன் ஆள்வதற்கும் வளமான பாதையில் இட்டுச் செல்வதற்கும் கூட்டு சமுதாயத்தைக் கொண்டிருக்கும் மலேசியாவிற்கே உரிய சமய- சமூக நல்லி-ணக்கத்திற்கும் தேசிய முன்னணி ஆட்சி-தான் சிறந்தது என்பதை நாடு முழுக்க மக்கள் உணர்ந்து விட்டனர்.

தேசிய முன்னணியையும் தேசிய முன்னணி உறுப்புக் கட்சியான மஇகாவையும் குறை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்னமும் அதையே செய்து கொண்டிருக்கின்றனர்.

நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்வ-தற்கு பதிலாக பிரிவினை அரசியலை மேற்கொண்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய பொருளாதார கல்வி சமூக கடமைகளை புறந்தள்ளி விட்டனர்.

இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டதால் தான் நாட்டின் தெற்கு பகுதியிலிருந்து ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலாக தேசிய முன்னணிக்கு வற்றாத ஆதரவை நாட்டு மக்கள் வழங்கி வருகின்றனர்.

அடுத்து நடைபெற இருக்கின்ற சரவாக் மாநில தேர்தல், நாட்டின் மையப்பகுதியில் நடைபெற இருக்கின்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தல், அதற்கடுத்து நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற 16ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அனைத்தி-லும் தேசிய முன்னணிதான் வெற்றிபெறும் என்பதை மலாக்கா மாநில பொதுமக்கள், குறிப்பாக வாக்காளர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மைக்-கும் அதிகமான வலிமையுடன் தேசிய முன்-னணியை வெற்றிபெற வைத்து, நாட்டை ஆள்வதற்கு தகுதியான கூட்டணி தேசிய முன்னணிதான் என்பதை அதிரடியாக நிறுவியுள்ள னர்.

மீண்டும் தேசிய முன்னணி தலைவர்களுக்-கும் குறிப்பாக மஇகா தலைவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் அதேவேளை, மலாக்கா மாநில வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மக்கள் சக்தி கட்சி சார்பில் குமரி வான்முற்ற இணைய ஊடகத்திற்கு அளித்த செய்தியில் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை