Saturday, November 14, 2026

விடுமுறைக்குப் பின் தலைநகருக்குத் திரும்புவோர் சாலைப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: -டத்தோ சங்கர ஐயங்கார்!

தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் விடு-முறை நிறைவடைந்து தலைநகர் மற்றும் பிற நகரப் பகுதிகளுக்குத் திரும்பும்வேளையில் சாலைப் பாதுகாப்புக்கு முதன்மை அளிக்க வேண்டும் என மஇகா சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோ சங்கரன் ஐயங்கார் கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகைக் கால மகிழ்ச்சி பாதுகாப்பான பயணத்தால் மட்டுமே முழுமை பெறும் என்பதை வலியுறுத்தினார்.

தீபாவளி திருநாள் தொடர்பில் இலட்சக் கணக்கானோர் தங்களுடைய சொந்த கிராமங்களுக்கும் வெளியூர்களுக்கும் சென்றுள்ளனர். தற்போது அவர்கள் மீண்டும் பணியிடங்கள் மற்றும் வசிப்பிடங்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, அவசரப்படாமல் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் பயணத்திற்கு முன்பு வாகனங்களை சோதனை செய்வதுடன், போதுமான ஓய்வையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மேலும், அதிக வேகம், கவனக்குறைவு, கைப்பேசி பயன்பாடு மற்றும் சோர்வான நிலையில் வாகனம் ஓட்டுவது போன்றவை விபத்துகளுக்குக் காரணமாக அமையக் கூடும் என்பதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென வும் அவர் கேட்டுக்கொண்டார்.

“இன்றைய வாழ்க்கை நாளையும் தொடர வேண்டும். குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு தீபாவளியைக் கொண்டாடிய நிலையில், அனைவரும் பாதுகாப்பாக தங்களது இல்லங்களையும் பணியிடங்களையும் சென்றடைவதே மிக முக்கியமானது. ஒரு கண நேர அலட்சியம் வாழ்நாள் முழுவதும் வருத்தத்தை ஏற்படுத்திவிடக் கூடும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, நாட்டின் அனைத்து சாலைகளிலும் பயணிக்கும் மக்கள் போக்குவரத்து விதிகளை முழுமையாகப் பின்பற்றி, தங்களின் உயிரையும் மற்ற சாலைப் பயனாளர்களின் உயிரையும் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என டத்தோ சங்கரன் ஐயங்கார் வலியுறுத்தினார்.

“பாதுகாப்பான பயணமே குடும்பத்தின் நிம்மதியையும் சமூகத்தின் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்தும்” என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை