Thursday, November 12, 2026

ஆட்சிக் குழுவில் தமிழர் இடம்பெற நடராஜனை வெற்றிபெற செய்யுங்கள்!

காடேக் தொகுதி வாக்காளர்களுக்கு டத்தோ ராமலிங்கம் அறைகூவல்!!

மலாக்கா மாநில 16ஆவது சட்டமன்றத் தேர்தல் வரும் சனிக்கிழமை நவம்பர் 14ஆம் நாள் நடைபெற இருக்கின்ற நிலையில், தற்போதைய தேசிய முன்னணி ஆட்சியேத் தொடரும் என்பது தொகுதி முழுவதும் வாக்காளர்கள் மூலம் பிரதிபலிக்கிறது.

அந்த வகையில் அடுத்த ஆட்சியும் தேசிய முன்னணி ஆட்சியாக அமைய இருக்கும் சூழலில் காடேக் தொகுதியில் போட்டியிடும் மஇகா வேட்பாளர் செ. நடராஜன் வெற்றி பெற்றால் அவர் ஆட்சிக் குழுவில் இடம் பெறுவது உறுதியிலும் உறுதி.

எனவே, காடேக் தொகுதிவாழ் இந்திய வாக்காளர்கள் அனைவரும் தேசிய முன்னணி வேட்பாளருமான நடராஜனை வெற்றி பெற செய்யும்படி ம.இ.கா. தேசிய தகவல் பிரிவு தலைவரும் பத்து தொகுதித் தலைவருமான டத்தோ இராமலிங்கம் காடேக் வாக்காளர்களை மீண்டும் வலியுறுத்தினார்.

தேர்தலுக்குப் பின் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சி அமைந்து, காடேக் தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் மக்கள் பிரதிநிதியாக மட்டுமே இருப்பாரேத் தவிர ஆட்சி குழுவில் இடம் பெற மாட்டார்.

சாதாரண சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் ஆட்சிக் குழு உறுப்பினராக இருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை இந்திய வாக்காளர்கள் நன்கு சீர்தூக்கி பார்த்து கடேக் தொகுதி வாக்காளர்கள், குறிப்பாக இந்திய சமுதாய வாக்காளர்கள் இந்திய சமுதாயத்தின் சமூக-கல்வி- பொருளாதார சிக்கல் தீர நடராஜனை வெற்றி பெற வைக்கும் படி
தொழில் அதிபருமான டத்தோ ராமலிங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை