Thursday, November 12, 2026

மலாக்கா இந்திய வாக்காளர்கள் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்!

மலாக்கா மாநில சட்டமன்ற தேர்தல் ஏறக்குறைய இன்னும் 40 மணி நேரத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் இந்திய வாக்காளர்கள் பக்கத்தில் பிறப்பான் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று சிலாங்கூர் சேந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஊடகத்தினர் மூலம் கேட்டுக்கொண்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் சாரா சமூக நலத் திட்டம் உட்பட அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் மூலம் பல்லின
சமூகம் அதிகமான நன்மை அடைந்துள்ளது.

இதன் தாக்கம் மலாக்கா மாநிலத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்றால் மலாக்கா மாநில இந்திய வாக்காளர்கள் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றும் பிகேஆர் சார்பில் போட்டியிடும் இந்திய வேட்பாளர்களை முழுதாக ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பிகேஆர் உலு உசிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், பிகேஆர் தேசிய உதவி பொதுச் செயலாளர் சிவ மலர், பிகேர்ஆர் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சிவராசா, பிரதமர் துறை இந்திய அதிகாரி சண்முகம் மூக்கன், பி கே ஆர் மலாக்கா மாநில உதவித் தலைவர் ஜெகதீசன் உட்பட அதிகமானோர் வாழ்ந்து கொண்ட இந்த செய்தியாளர் சந்திப்பு மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் நடைபெற்றது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை