Thursday, November 12, 2026

மாற்றுத் தொழிலாளர்(GANTIAN) அனுமதி கிடைத்தாலே பாதி சிக்கல் தீரும்: -பிரெஸ்மா

உணவகத் துறையில் மாற்றுத் தொழிலாளர்களுக்கான(Gantian) அனுமதி கிடைத்தாலே அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் (பிரெஸ்மா) தலைவர் டத்தோ முகம்மது மோசின் தெரிவித்தார்.

பிரெஸ்மாவின் 22ஆவது ஆண்டுக் கூட்டம் நேற்று தலைநகரில் மாட்ரேட்(MATRADE) மண்டபத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து பிரெஸ்மா உறுப்பினர்கள் கலந்து கொண்ட இம் மாநாட்டை உள்நாட்டு வாணிபம் – வாழ்க்கை செலவினத் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் தொடக்கி வைத்தார்.

சங்கத்தின் சார்பில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, திரவநிலை பெட்ரோலிய எரிவாயு- எல்பிஜி கேஸ் குறித்த விவகாரத்திற்கு அமைச்சு தீர்வு காண்பதாக அமைச்சர் வாக்குறுதி வழங்கினார்.

மேலும் பிரதமர் அறிவித்த 15,000 அந்நியத் தொழிலாளர்கள் விண்ணப்பத்தை மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருவதாக கூறினார். ஆரம்பத்தில் இந்த 15,000 தொழிலாளர்களும் உணவகத் துறைக்கு என நினைத்தோம்.

ஆனால் இந்திய வர்த்தகம்-தொழில் சார்ந்த அனைத்து தொழிலுக்கும் சேர்த்து அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு த் தொழிலாளர் எண்ணிக்கை தான் இந்த 15 ஆயிரம் என்பது பின்னர் தெரிய வந்தது. இருந்தாலும் பிரெஸ்மாவிற்கு போதிய அளவில் அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் உணவகத் துறைக்கான மாற்றுத் தொழிலாளர்கள் அனுமதியை அரசாங்கம் விரைந்து கொடுக்க வேண்டும்.

இந்த அனுமதி கிடைத்தாலே உணவக தொழிலுக்கான அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் உணவகத் துறையில் குறிப்பிட்ட அளவிற்கு பங்காற்றும் பிரெஸ்மாவின் கோரிக்கையை ஒற்றுமை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் டத்தோ மோசின் கேட்டுக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை