
கோலாலம்பூர் நவ 11-
இந்து சமயத்தின் தலையாய பண்டிகையான தீபாவளித் திருநாள் முன்னிட்டு
தேசிய அளவிலான 2026-தீபாவளி கொண்டாட்டம் வரும் சனிக்கிழமை, நவம்பர் 14-ஆம் நாள் பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் மாபெரும் அளவில் நடைபெற இருக்கிறது.
தேசிய ஒற்றுமைத் துறை மற்றும் மலேசிய இந்திய வர்த்தக தொழிற் சங்க சம்மேளனம் (MAICCI) இணைந்து நடத்தும் இந்த விழா லிட்டில் இந்தியா, பிரிக்ஃபீல்ட்ஸ் (Little India, Brickfields) பகுதியில் காலை 9:30 மணி முதல் இரவு 10:30 மணிவரை நடைபெறும் என்று ‘மைக்கி’ தலைவர் டத்தோஸ்ரீ ந..கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், கலாச்சார கண்காட்சிகள் மற்றும் பாரம்பரிய உணவு விருந்தெல்லாம் இடம்பெறும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காலை 11:00 மணி அளவில் சிறப்பு வருகை புரிகிறார்.
பிரதமர் உரையில் இந்திய சமுதாயத்திற்காக சிறப்பு அறிவிப்பு செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளனம்- மைக்கி’யில் இடம் பெற்றுள்ள அனைத்து வர்த்தக அமைப்புகளும் கலந்து கொள்கின்றன.
மண்ணின் மைந்தர்களின் இன்னிசை படைப்புகள் பொதுமக்களை பரவசத்தில் ஆழ்த்தும்.

மேலும் இந்த விழாவில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஏறக்குறைய இரண்டு மணிநேரம் இந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களையும் சந்திக்கவிருக்கிறார்.
விலாயா மாநிலத்தில் உள்ள 15 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்களின் படைப்புகள் முத்தாய்ப்பாக இருக்கும்.
பொதுமக்கள் தங்களது வாகனங்களை மூன்று பள்ளிகளில் உள்ள இடங்களில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
இன்று மைக்கி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவாவிவரத்தை தெரிவித்தார்.
மைக்கி துணைத் தலைவர் டத்தோீ டாக்டர் ஏ.டி.குமரராஜா, விக்னேஸ்வரன் மற்றும் லெட்சுமணன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


