
மலாக்கா மாநில சட்டமன்றத்திற்கு 16-ஆவது தேர்தல் நாளை நவம்பர் 14, சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் தேசிய முன்-னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள மஇகாவின் செ. நடராஜா, காடேக் தேர்தல் நடவடிக்கை அறையில் நேற்று செய்தி-யாளர்களை சந்தித்த பொழுது காடேக் தொகுதி இந்திய வாக்காளர்களின் எதிர்பார்ப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
‘தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி, தங்களை அடிக்கடி சந்தித்து தத்தம் குறைகளை நேரில் கேட்டறிய வேண்டும்’ என்று பிரச்சாரத்திற்காக போகும் இடமெல்லாம் கோரிக்கை வைக்கின்றனர் என்று தெரிவித்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத் த்தாக்கலுக்கு பிறகு தொடர்ந்து தொகுதி வாக்காளர்களை அயராது சந்தித்து வருவதாகவும் சந்திக்க முடியாத வாக்காளர்களை முடிந்த வரை சந்திக்க இருப்பதாகவும் ஒருவேளை அப்படி எல்லாம் தேர்தல் அதிகாரிங்களா ஒ சந்திக்க முடியாத வாக்காளர்கள் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரக் குழுவினர் எதிர்கொள்ளும் நேர தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தங்களின் ஆதரவு தேர்தல் நாளில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தேசிய முன்னணி ஆட்சி மீண்டும் அமைவது உறுதியாகிவிட்ட நிலையில் கடை தொகுதி மக்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆட்சி குழுவில் இடம் பெறுவது உறுதி என்றும் சாதாரண சட்டமன்ற உறுப்பினராக இருப்பதை காட்டிலும் ஆட்சி குழு உறுப்பினராக இருந்தால் தொகுதிக்கு ஏராளமான நன்மையை கொண்டு வர முடியும் அதைப்போல ஆங்கிலத்தில் உள்ள ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கும் அதிக அளவில் சிலர் ஏற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

தன்னைப் பொருத்தவரை, தான் பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் உடனடியாக தொகுதி மக்களுக்கான சேவை மையம் திறக்கப்படும் என்றும் அதேவேளை மாதத்திற்கு ஒருமுறை; வாரத்திற்கு ஒரு முறை; அல்லது வார நாட்களில் அல்லது பொது விடுமுறை நாட்களில் என்றெல்லாம் அட்டவணையிட்டு தொகுதி மக்களை சந்திப்பது ஒரு புறம் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் உணவுக் கடையில் தேநீர் அருந்தும் பொழுது, நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது, காலை சந்தை மாலை சந்தை என்றெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பொதுமக்களை சந்திக்கவும் அவர்களின் கருத்தை நேருக்கு நேர் அறிந்து சேவை புரியவும் தயாராக இருப்பதாக தெரிவித்த நடராஜா செல்லப்பன்,
காடேக் தொகுதி இந்திய வாக்காளர்கள் அனைவரும் தன்னை முழுமையாக ஆதரித்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு ஊடகத்தினர் மூலம் கேட்டுக்கொண்டார்.


