
கோலாலம்பூர், அக்டோபர் 07:
மலேசியாவிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள மியான்மர் அதிபர் ஜெனரல் மின் ஆங் லாய்ங்கிற்கு(Mon Aung Hlaing) எதிராக கைது ஆணை பெரும் பொருட்டு அரசு வழக்கறிஞரின் சார்பாகச் செயல்பட(Ad hoc Prosecutor) தன்னை நியமிக்கும்படி அல்லது அதிகாரம் வழங்கக் கோரி, மனித உரிமை வழக்கறிஞர் பொன். வேத மூர்த்தி தேசிய சட்டத்துறை தலைவர் அட்டர்னி ஜெனரலிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மின் ஆங் லாய்ங் நேற்று புதன்கிழமை கோலாலம்பூருக்கு வந்துள்ள நிலையில் சட்டத்துறை தலைவருக்கு சட்ட வல்லுனருமான பொன் வேதமூர்த்தி இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
தன் விண்ணப்பத்திற்கு ஆதரவாக, மியன் மாரில் இடம்பெற்றத அரசியல் படுகொலை கள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, சித்திரவதை, கட்டாய இடப் பெயர்வு ரோஹிங்கியா கிராமங்களை எரித்து அழித்தது ஆகியவற்றை ஆவணப்படுத்தும் ஐநா மன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தொகுப்பையும் பொன் வேதமூர்த்தி சட்டத்துறை தலைவருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் இணைத்துள்ளார்.

இந்த ஆவணங்களில், மியான்மர் மீதான ஐநா மன்றத்தின் சுதந்திரமான சர்வதேச உண்மை கண்டறியும் குழுவின் கண்டு பிடிப்புகளும் அடங்கியுள்ளன. இனப்படு-கொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்-றிற்காக விசாரிக்கப்பட்டு, வழக்குத் தொடரப் பட வேண்டும் என்று அது பரிந்துரைக்கப் பட்டுள்ள மூத்த இராணுவத் தளபதிகளில் மின் ஆங் லாய்ங்கும் ஒருவர் என அடை-யாளம் காணப்பட்டுள்ளது.
ரோஹிங்கியா மக்களை நாடுகடத்தியது, துன்புறுத்தியது உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக மின் ஆங்-ற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் (ICC) வழக்கறிஞர் வழங்கிய கைது ஆணைக்கான விண்ணப்பத்தையும், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கு-களில் உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்தும் அர்ஜென்டினா நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு பற்றியும் பொன் வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
1994-ல் இங்கிலாந்து வழக்கறிஞர் சங்கத்-தில் உறுப்பினராகச் சேர்ந்த பொன். வேத மூர்த்தி, மலாயா உயர்நீதிமன்ற வழக்கறிஞ-ராகவும் உள்ளார்.
“குற்றம் சாட்டப்பட்டவர் இங்கு அழைக்கப் பட்ட வெளிநாட்டுத் தலைவர் என்பதற்காக, இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை மலேசியா கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, மலேசிய நாடாளுமன்றம், ஜெனீவா உடன்படிக்கை தொடர்பான சட்டத்தை இயற்றியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மலேசியச் சட்டத்துடன் தொடர்புடையதாக இருந்தால், அந்தச் சட்டம் அதன் போக்கில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய சட்டத் துறை தலைவர்-அட்டர்னி ஜெனரலிடம் அனுமதி கேட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் பொன் வேதமூர்த்தி மேலும் தெரிவித்திருக்கிறார்.


