Thursday, October 8, 2026

மக்களுக்கான கடமையில் இருந்து மஇகா பின்வாங்காது: -டத்தோஸ்ரீ சரவணன்!

அரசியலில் நாம்தான் எல்லாம் என்ற நினைப்பில் இருந்தால் காணாமல் போய்விடுவோம் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன் எச்சரித்தார்.

கூட்டரசுப் பிரதேச மஇகாவின் 80ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை தேசியத் தலைவர் சார்பில் தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், மஇகா என்னும் பேரியக்கம் மக்களுக்காக தொடர்ந்து போராடும் என்று அண்மையில் மாணிக்கவா சகம் மாளிகை, நேதாஜி அரங்கத்தில் நடைபெற்ற மஇகா விலாயா (கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச) மாநிலக் கிளையின் 80-ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டைத் தொடகஅகி வைத்து சிறப்புரை ஆற்றியபோது பேசினார்.

பல்வேறு சவால்கள், அவதூறுகள், எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரங்கள் மஇகாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் மக்களுக்கான கடமையில் இருந்து கட்சி ஒரு போதும் பின்வாங்கியது இல்லை என்று அவர் சொன்னார்.

தற்போதைய அரசியல் முழுமையாக சமூக ஊடக பிரச்சாரமாக மாறிவிட்டது. இந்த சவாலை எதிர்கொள்ள மஇகா தயாராக வேண்டும்.

அதற்கு ஒவ்வொரு தொகுதி, கிளையிலும் ஓர் ஊடக அதிகாரியை உருவாக்க வேண்டும்.

கட்சியின் சாதனைகளை பேசுவதுடன் நமக்கு எதிரான பொய் பிரச்சாரங்களுக்கும் அதிரடியான பதிலை உடனுக்குடன் தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை