Thursday, October 22, 2026

திக்குவாய் விழிப்புணர்வு நாள்!

இன்று பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள்

திக்குவாய் என்பது ஒரு குறைபாடு அல்ல; அது பேசும் முறையின் ஒரு வேறுபாடு மட்டுமே.

பேசும்பொழுது திக்குகின்ற அவர்களின் கருத்தை பொறுமையுடன் கேட்பதும் இடைமறிக்காமல் உரையாட விடுவதும் மரியாதையுடன் நடத்துவதும் தான் உண்மையான விழிப்புணர்வு.

பன்னாட்டு திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness Day, ISAD), அல்லது பன்னாட்டு திணறல் விழிப்புணர்வு நாள் (International Stammering Awareness Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 22 ஆம் நாள் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வாகும்.

இது முதன் முதலில் 1998 இல் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது.

உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய ஒரு விழுக்காட்டு பேர் திக்குவாய் அல்லது திணறுபவர்களாக உள்ளனர், இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் வகுக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், உலகெங்கிலும் உள்ள திக்குவாய் சமூகங்கள் மற்றும் சங்கங்கள் ஒன்று கூடி, சமூகத்தின் சில அம்சங்கள் திக்குவாய் நபர்களுக்கு எவ்வாறு கடினமாக இருக்கும்; எதிர்மறை அணுகுமுறைகளைம் பாகுபாடுகளையும் எதிர்கொள்ளல்; திக்குவாய் நபர்கள் பதற்றமானவர்கள் அல்லது குறைந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்ற கட்டுக்கதைகளை நீக்கல் போன்றவற்றை முன்னிலைப்படுத்த நிகழ்வுகளும் பிரச்சாரங்களும் இந்த நாளில் நடத்தப்படுகின்றன.

அறிவியல், அரசியல், தத்துவம், கலை, திரைப்படம், இசை ஆகிய துறைகளில் உலகில் தடம் பதித்த அல்லது பதித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற திக்குவாய் மனிதர்கள் இந்நாள் கொண்டாடப் படுகின்றனர்.

திக்குவாய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள், ஊடகப் பரப்புரை, கல்வி நடவடிக்கைகள் போன்றவையும் இடம்பெறுகின்றன.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை