உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு இரு வாரங்களுக்குத் தேவையான அடிப்படை உணவுப் பண்டங்களை வழங்கினார் டத்தோ சுரேஷ் ராவ்

அத்யாவசிய உணவுப் பண்டங்களின்விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்கும் நோக்கில், வவாசான் கட்சியின் செலாயாங் தொகுதி பொருளாளர் டத்தோ சுரேஷ் ராவ், இம்முறை கட்சி சார்பில் 100 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்.
கடந்த 20 ஆண்டுகளாகத் தன் சொந்த முயற்சியில் தீபாவளி காலத்தில் உதவிகள் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாண்டு கட்சி சார்பில் இந்த உதவித் திட்டத்தை முன்னெடுத்ததாகத் தெரிவித்தார்.

தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, உதவி பெற்றவர்கள் அடுத்த இரு வாரங்களுக்குத் தேவையான அடிப்படை உணவுப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவை வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், நாட்டில் நிலவிவரும் புகை மூட்டத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களது சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, தேவையற்ற வெளிப்புறப் நடவடிக்கையை குறைத்துக் கொள்வதுடன், புகை மூட்டத்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டத்தோ சுரேஷ் ராவ் கேட்டுக்கொண்டார்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் தேவையுடைய மக்களுக்கு உதவுவதுடன், அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.



