Saturday, October 24, 2026

12 ஆண்டுகளாக 1,000 சிறார்களுக்கு புத்தாடை வழங்கும் ராணி சில்க்ஸ்!

கால் நூற்றாண்டுக்கும் மேலான வியாபாரப் பயணத்தில் 13 விருதுகள்; இம்முறை ஆசியா மற்றும் ஆசியான் விருதுகள்!

கடந்த 12 ஆண்டுகளாக ஆண்டதோறும் ஆதரவு இல்லக் குழந்தைகளுக்கு தீபாவளிப் புத்தாடைகளை வழங்கி வரும் ராணி சில்க்ஸ் நிறுவனம், இவ்வாண்டும் தனது சமூக சேவையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

ராணி சில்க்ஸ் உரிமையாளர் டத்தோ ரஃபிக் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியின் சிறப்பம்சமாக, குழந்தைகளுக்குத் தாங்கள் விரும்பும் ஆடைகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆதரவற்ற இல்லக் குழந்தைகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் 1,000 குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்குவதன் மூலம், தீபாவளிப் பண்டிகையை அவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கான வாய்ப்பை ராணி சில்க்ஸ் ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து டத்தோ ரஃபிக் கூறுகையில், கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரத் துறையில் ஈடுபட்டுவரும் ராணி சில்க்ஸ் நிறுவனத்திற்குத் இதுவரை 13 விருதுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அண்மையில் ஆசியா மற்றும் ஆசியான் விருதுகள் கிடைத்திருப்பது தங்களுக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வியாபாரம் என்பது வருமானத்தை ஈட்டுவதோடு மட்டும் நின்றுவிடாமல், சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் ஆதரவு இல்லக் குழந்தைகளுக்கும் தேவையுடைய மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவது மகிழ்ச்சியளிக்கும் செயலாகும்.

இதுபோன்ற சமூக நலப் பணிகளில் மற்ற வியாபாரிகளும் ஈடுபடுவதைத் தாம் வரவேற்பதாக டத்தோ ரஃபிக் கூறினார்.

பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியை ஆதரவற்ற குழந்தைகளுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில், கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, வியாபார நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை