Friday, October 23, 2026

வாடிக்கையாளர்களே இல்லாத 2026 தீபாவளி சந்தை: -85 வியாபாரிகள் வேதனை!

கோலாலம்பூர், பிரிக் ஃபீல்டஸ் லிட்டில் இந்தியா பகுதியில் வழக்கம் போல தீபாவளி சந்தைக்கான கடைகளை அமைத்துக் கொடுத்தால் லாபகரமாக இருக்கும் என்றும் தற்பொழுது கோலாலம்பூர் மாநகர் மன்றம் டிபிகேஎல் சார்பில் ‘Pusat Sukan & Rekreasi’ திடலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய தீபாவளி கடைகள் மிகவும் ஒதுக்குப்புறமாக இருப்பதால் வாடிக்கையாளர்களே வருவதில்லை என்று ஏறக்குறைய 85 வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கின்றன. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான வெள்ளிக்கு நாங்கள் வியாபாரம் செய்து விட்டோம்.

இந்த ஆண்டு பல ஆயிர வெள்ளிக்கு முதலீடு செய்து துணிமணிகள், தீபாவளி புத்தாடைகள், முறுக்கு வகை, பலகார பண்டங்களை காட்சிக்கு வைத்து ஒரு நாளைக்கு 50 வெள்ளிக்கு வியாபாரம் செய்வதுகூட சிக்கலாக இருக்கிறது என்று வருத்தம் தெரிவிக்கின்ற இந்த புதிய பகுதி தீபாவளி சந்தை வியாபாரிகள்,

கடந்த ஆண்டுகளைப் போல பழைய இடத்திற்கு கடையை மாற்றிக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர்.

பல ஆயிரம் வெள்ளி முதலீட்டைப் போட்டு, கடந்த இரு வாரமாக வியாபாரமே இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.

அதேவேளை கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு மிகவும் சிறப்பானது.

நானூறு வெள்ளி வாடகையில் சிறந்த கடைகளை கட்டிக் கொடுத்திருக்கின்றனர்.

இருந்தபோதும் வியாபாரம் இல்லாமல் இங்கு தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்பதால் இதன் தொடர்பில் கோலாலம்பூர் நகராண்மைக் கழக அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து வியாபாரிகளும் ஒரு முகமாக கேட்டுக் கொள்கின்றனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை