Thursday, October 22, 2026

எஸ்பி கேர் கிளினிக் குழுமம் மாஸ்கோ மருத்துவ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்:

–முதல் மாணவராக வைத்தீஸ்வரன் முரளி இன்று மாஸ்கோ பயணம்!

ரஷ்யாவிற்கு புறப்படுமுன் தன் தாயிடம் இருந்து அன்பையும் பிரியாவிடையையும் வாழ்த்தையும் கண்ணீர் மல்க ஒரு சேர பெரும் அன்பு மகன் வைத்தீஸ்வரன்.. .

சிலாங்கூர் மாவட்டத்தில் குறிப்பாக ரவாங் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவிலான மருத்துவ கட்டமைப்பை கொண்டிருக்கின்ற எஸ்பி கே ஆர் கிளினிக் குழுமமும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ
Shchenovia மருத்துவ பல்கலைக்கழகமும் மருத்துவக் கல்வி சார்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

அதன் அடிப்படையில் மலேசியாவில் இருந்து முதல் மருத்துவ மாணவராக வைத்தீஸ்வரன் முரளி த/பெ வேலாம்பூர் நேற்று மாஸ்கோவிற்கு பயணமானார்.

சமூகத்திற்கு சேவை செய்வதை இலக்காகக் கொண்டு மருத்துவக் கல்வியை மேற்கொள்ள மாஸ்கோவுக்கு நேற்று பயணம் மேற்கொண்டுள்ள வைத்தீஸ்வரனின் தாயார், இதே எஸ்பி கேர் கிளினிக் குழுமத்தில் தலைமை செயல்முறை அதிகாரியாக (COO) பணிபுரிகிறார். தந்தை பாபா’ஸ் நிறுவனத்தில் விற்பனை மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிகிறார்.

அரசியல் ஈடுபாடு இருந்தாலும் மருத்துவத் துறை சார்ந்து ஏராளமான சமூக நல திட்டங்களை சளைக்காமல் மேற்கொண்டு வருகிறார் எஸ்பி கேர் கிளினிக் குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான டாக்டர் சத்திய பிரகாஷ்.

சமூக நல நோக்கத்தை முதன்மையாக கொண்ட டாக்டர் சத்திய பிரகாஷ் ஒரு நலிந்த குடும்பத்தின் ஒரே பிள்ளை, மருத்துவராகுவதற்காக தன்னால் இயன்ற உதவி அனைத்தையும் செய்து இன்று அவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாஸ்கோ பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் மாணவரை இன்று அனுப்பி வைத்துள்ளார்.

வைத்தீஸ்வரனை போல போல மாஸ்கோவில் மருத்துவக் கல்வி மேற்கொள்ள விரும்பும் இந்திய மாணவர்கள் எஸ் பி கேர் கிளினிக் குழுமத்தின் சிறப்பு அதிகாரி கா.ரங்கநாதனை தொடர்பு கொள்ளலாம்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை