Saturday, September 12, 2026

இந்திய வர்த்தக சம்மேளனத்தின் (MAICCI)தொழில் முனைவோர் மாநாடு!

செப்டம்பர் இருப்பதில் நடைபெறுகிறது

மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளனத்தின் (Malaysian Associated Indian Chambers of Commerce and Industry-மைக்கி) 2026-ஆம் ஆண்டுக்கான தொழில் முனை-வோர் மாநாட்டை தொழில்முனைவோர் மேம்பாடு-கூட்டுறவு நலத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் தொடக்கி வைக்க இருக்கிறார் என்று மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ ந. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மைக்கி முன்னெடுத்துள்ள 2026-தொழில் முனைவோர் மாநாடும் முத்ரா பிரச்சார பயணமும் தேசிய அளவில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ கோபால கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள இந்திய வணிகர்களின் மேம்பாட்டிற்காக மைக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில் மைக்கி மாபெரும் அளவில் தொழில் முனைவோர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாநாடு இம்மாதம் (செப்டம்பர்) 20ஆம் நாள் காலை 9:00 மணி அளவில் பிரிக் பீல்ட்ஸ் பேங்க் ராக்யாட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு- கூட்டுறவு நலத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க இருகிறார்.

மைக்கி-யின் இந்த தொழில் முனைவோர் நல மாநாடு – 2026, இந்திய தொழில் முனைவோரையும் வர்த்தகச் சமூகத்-தினரையும் தேசிய அளவில் ஒருங்கிணைத்து, வர்த்தகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொழில்முனைவோருக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கவும் துணையாக அமையும் என்று அவர் சொன்னார்.

இந்த நிகழ்ச்சி, நாடு முழுவதும் இந்திய வர்த்தக தொழிற்சங்கங்களினால் நடத்தப்பட்டு வரும் முத்ரா பிரச்சார பயணத்தின் நீட்சியாக அமையும்.

இதன் மூலம் தொழில் வர்த்தகர்களையும் இளம் தொழில் முனைவோரையும் நேரடியாக அணுகி, தகவல் பரிமாற்றம், நிதி ஆதாரம், வர்த்தக ஆதரவு, தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான வாய்ப்பு உள்ளிட்டவற்றை அதிகரிக்க முடியும் என்று நம்புவதாக கோபாலகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

எனவே, இம்மாநாட்டில் இந்திய தொழில் முனைவோரும் வர்த்தகச் சமூகத்தினரும் பாரிய அளவில் கலந்து கொண்டு நன்மை அடைய வேண்டும் என கேட்டுக் கொள்வ-தாக இதன் தொடர்பில் மைக்கி தலைமை-யகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டார்.

மைக்கி துணைத் தலைவர் டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா, உதவித் தலைவர்கள் திருநாவுக்கரசு உட்பட பலரும் இந்த சந்திப்பில் கலந்து சிறப்பித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை