Saturday, September 12, 2026

ஜொகூர் பாருவில் இருநாள் படைப்பூடகப் பயிற்சி: -21 பேர் நிறைவு செய்தனர்

கடந்த ஆகஸ்ட் திங்கள் 27-28ஆம் நாட்களில் நடைபெற்ற இருநாள் பயிற்சிப் பட்டறையில் 21 பங்கேற்பாளர்கள் பங்கேற்று புகைப்படக் கலை, ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் தொடர்பான நடை முறை அனுபவங்களைப் பெற்றனர்.

‘Photography, Cinematography & Content Creation Workshop – Season’ எனும் இப்பயிற்சி, ஜொகூர் இந்திய வர்த்தக சங்க ஏற்பாட்டில் ஜொகூர் டவர் (ட்ரோப்பிக்கல் இன்) வளாகத்தில் நடைபெற்றது.

திரைப்பட இயக்குநரும் படைப்பூக்க வழிகாட்டியுமான தினேஷ் குமார், Clipshot Nesh என்னும் தினேஷ் ஆகியோர் இந்தப் பயிற்சியை வழிநடத்தினர். புகைப்பட கருவியை இயக்குதல், ஒளியமைப்பு, காட்சி யமைப்பு, கதைசொல்லல், உள்ளடக்க உருவாக்கம், தனிநபர் முத்திரை, உள்ளடக்-கத்தின் மூலம் வருமானம் ஈட்டுதல் உள்ளிட்ட நடைமுறைத் திறன்களுக்கு இந்தப் பயிற்சி-யில் முந்னுரிமை அளிக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் கற்றுக்கொண்ட தொழில் நுட்பங்களை நடைமுறையில் பயன்படுத்தும் வகையில், புகைப்படக் கருவி மற்றும் விவேக தொலைபேசியைப் பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் குறுகிய காணொளி உள்ளடக்கங்களை உருவாக்கும் பயிற்சி-யிலும் ஈடுபட்டனர்.

டிஜிட்டல் உள்ளடக்கத்தை வெறுமனே நுகர்-வோராக இருப்பதைவிட, தங்களின் சொந்த படைப்புகளை உருவாக்கி, அவற்றைச் சிறப்பாக வழங்குவதுடன், எதிர்காலத்தில் அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்குத் தேவையான திறன்களை பங்கேற்பாளர்-களுக்கு வழங்குவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு செலவில் கணிசமான பகுதியை ஜோகூர் இந்திய வர்த்தக சங்கம்-JIBA வழங்கியதால், பங்கேற்பாளர்கள் குறைந்த கட்டணத்தில் பயிற்சியில் கலந்துகொள்ள முடிந்தது. சமூக ஆர்வலர் மைக்கேல் டே, ஆதரவற்ற பின்னணியைச் சேர்ந்த 10 சிறார்களுக்கான பயிற்சிக் கட்டணத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டதுடன், அவர்கள் இலவசமாகப் பயிற்சியில் பங்கேற்கவும் வாய்ப்பளித்தார்.

வீடியோ மற்றும் திரைப்படத் தயாரிப்பில் டிப்ளோமா பெற்றுள்ள தினேஷ் குமார், Clipshot Nesh Production நிறுவனத்தை நிறுவியவர். இயக்குநர், நடிகர், தயாரிப்-பாளர் மற்றும் பயிற்றுநர் என பல்வேறு திரைப்பட மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகளில் பணியாற்றி வருகிறார்.

அவரது படைப்புகள் UNESCO 2018 சிறந்த குறும்பட விருது, சோழன் திரை விழா(Cholan Film Festival) விருது, மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விருது உள்ளிட்ட அங்கீ-காரத்தைப் பெற்றுள்ளன.

மேலும், மலேசியா மற்றும் சிங்கப்பூரின் வெற்றிகரமான நபர்களை அறிமுகப் படுத்தும் Bristishpedia வெளியிட்ட Successful People in Malaysia and Singapore நூலின் 8ஆம் பதிப்பிலும் தினேஷ் குமாரின் தொழில்-முறைப் பயணம் இடம்பெற்றுள்ளது. இது மலேசியாவின் படைப்புத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் பயணத்தையும் அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது.

இருநாள் பயிற்சியின் நிறைவில், பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பங்கேற்-பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தனிப்பட்ட படைப்புகள், தொழில்முறைப் பணிப்பட்டியல், சமூக ஊடக உள்ளடக்கங்கள் மற்றும் படைப்புத்துறை-யில் எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய நடைமுறை அறிவையும் திறன்களையும் வழங்குவதே இப்பயிற்சியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்-கள் தெரிவித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை