Thursday, October 29, 2026

வாழிய வாலி!

இன்று அக்டோபர் 29, தமிழ்த் திரையுலகின் மாபெரும் பாடலாசிரியர் கவிஞர் வாலியின் பிறந்த நாள்.

கவிஞர் வாலியின் நினைவு, கோடம்பாக்கத்து எல்லையைக்
உலகெங்கும் வாழ்கின்ற தமிழரசன் நெஞ்சந்தனில் நிழலாடுகிறது..

தமிழ்தா திரையுலகில் மூன்று தலைமுறைகளைத் தொட்டு 15,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதி சாதனை படைத்துள்ளார் கவிஞர் வாலி.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என பல தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய அபூர்வப் படைப்பாளராக வாலி விளங்கினார்.

அவர் இயற்றிய பாடல்களில் காதல், தத்துவம், பக்தி, சமூகச் சிந்தனை, நகைச்சுவை என வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களும் பொதிந்துள்ளன.

திரைப்படப் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் கவிஞர், எழுத்தாளர், நடிகர் என்ற பல முகங்களுடனும் வாழ்ந்த அவர், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற பெருமைக்குரியவர்.

“காலம் மாறினாலும், கவிஞர் வாலியின் வரிகள் மாறாத இளமையுடன் வாழ்கின்றன.”
அவரின் பிறந்த நாளில், தமிழ் மொழிக்கும் திரையிசைக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம்.

பாடல்கள் ஆயிரம் படைத்த கவிஞர் வாலி, தமிழர் உள்ளங்களில் என்றும் வாழ்வார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை