Thursday, October 29, 2026

ஈழத் தமிழர் கிருஷ்ணகுமார் நாடு கடத்தப்பட்டார்: நாதியற்று போனதா தமிழினம்?

ஜெனிவா ஒப்பந்தத்தை மீறி ஈழத் தமிழர் கிருஷ்ண குமாரை தமிழ்நாட்டில் இருந்து நாடு கடத்தி இருக்கிறது புதுடில்லி மோடி அரசும் மோடியின் கைப்பிள்ளை விஜய் தலைமையிலான தமிழ்நாட்டு அரசும்.

இலங்கையில் சிங்கள பேரினவாத அரசு லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தும் காணமல் ஆக்கப்பட்டும் சொல்லோன்னா துயரங்களுக்கு ஆட்பட்டு நாட்டுரிமைப் பரிக்கப்பட்ட நிலையில் தாயின் மடியென தமிழ்நாட்டிலும் உலகநாடுகள் பலவற்றிக்கு ஏதிலிகளாக குடிபெயர்ந்து உள்ளனர்.

அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போர் நிலைகுத்திய பின்னர் போராளிகள் இலங்கை தீவில் வாழ முடியாத சூழலில் பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கெளரவத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் தாயின் மடியென தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த எமது தொப்புள் கொடி உறவுகளை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் ஈவு இரக்கமின்றி மனிதாபிமானமில்லாமல் நடத்துவதும் சிறப்பு முகாம் என்ற பெயரில் நீதிமன்றங்கள் தண்டனை வழங்காமலே
இந்த சிறப்பு சித்திரவதை முகாம்களில் ஆண்டு கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2016 ஆம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைப்பட்டு இருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை அவரின் விருப்பத்திற்கு மாறாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இலங்கைக்கு நாடு கடத்தி இருப்பது ஜெனிவா ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் மீண்டும் ஒரு ஈழத்தமிழர் சுபாஸ்கரனையும் அவரின் விருப்பத்திற்கு மாறாக நாடுகடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வருவது மனிதாபிமான மற்ற செயல் இதை ஒன்றி பாஜக அரசும் தமிழக தவெக அரசும் கைவிட வேண்டும் என்று திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அதன் தலைவர் மலை சி ஏ சத்தியா தெரிவித்துள்ளார்.

39 ஆண்டுகளுக்கு முன்பு 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 05 ஆம் தேதி அன்று இந்திய இலங்கை கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் தளபதிகள் லெப்டினன்ட் கர்னல் குமரப்பா லெப்டினன்ட் கர்னல் புலேந்திரன் உள்ளிட்ட 17 பேரை கைது செய்து பலாலி விமான நிலையத்தில் சிறை வைத்து இந்திய அமைதிப் படை விடுதலைப் புலிகளை சுற்றி முற்றுகை வளையம் போட்டிருந்த போது அந்த மாவீரர்கள் தங்களை இந்திய இராணுவம் கைது செய்து சிறைப்படுத்தினால் உடன்படுவோம் மாறாக சிங்கள இராணுவத்திடம் ஒப்படைத்தால் நஞ்சறுந்தி வீரச்சாவைத் தழுவோம் என்று எச்சரித்து கையில் ஆயுதம் இருந்தும் அமைதி ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்று எதிர் தாக்குதல் நடத்தாமல் அமைதியாக இருந்தவர்களின் முற்றுகையை அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசின் தவறான அறிவுறுத்தல் காரணமாக இந்திய அமைதிப் படை முற்றுகையை விளக்கியவுடன் சிங்கள இராணுவம் 17 விடுதலைப் புலிகளை சுற்றி வளைத்து தாக்கி கைது செய்ய முனைந்த போது சயனைடு குப்பிகளைக் கடித்து குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவினர்.

பன்னாட்டு அரங்கில் இன்று வரை இந்தியாவை காங்கிரஸ் கட்சியைத் ஈழத் தமிழர்கள் குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்றனர் என்பதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசுக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கும் நினைவூட்ட விரும்புகின்றேன்.

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசின் நடவடிக்கைகளுக்கு துணை போகும் வகையில் இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றத் துடிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகள் தமிழின விரோதப் போக்காகும் இதைத் தமிழ்க் கூறும் நல்லுலகம் ஒருபோதும் ஏற்காது ஈழத் தமிழர் ஆதரவு என்பது நீறுபூத்த நெருப்பாக என்றும் கனன்று கொண்டு இருக்கிறது.

முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்கள் ஊட்டிய இனமான நெருப்பு நெஞ்சில் எரிந்து கொண்டு இருக்கிறது என்பதை எச்சரிக்க விரும்புகின்றேன்.

எனவே ஈழத் தமிழர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றும் நடவடைக்கையை ஒன்றிய பாஜக அரசும் தமிழக தவெக அரசும் உடனடியாக கைவிட வேண்டும் என்று திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் மீண்டும் வலியுறுத்துவதாக மல்லிகை சி ஏ சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை