Saturday, September 12, 2026

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரியார்-அண்ணா சிலைகளுக்கு திரை! -மல்லை சத்தியா தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம்!!

அக்டோபர் 06 அன்று மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுராந்தகம் தொகுதியில் உள்ள தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஆகியோர் சிலைகள் திரைபோட்டு மூடப்பட்டுள்ளது கட்டணத்திற்கு உரியது,

தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்று ஐநா மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு பாராட்டிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 17யிலும் தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா, அதற்கு இரு நாட்களுக்கு முன்பும் (செப்டம்பர் 15-இல்) கொண்டாடப்பட உள்ளன.

தமிழ் நிலத்தின் மிகச் சிறந்த ஆளுமை-யரான இவ்விருவரின் பிறந்தநாளை தமிழ்நாட்டு அரசும் கட்சிகளும் மக்களும் எழுச்சியோடு கொண்டாட இருக்கும் நிலையில், இடைத் தேர்தலை காரணம் காட்டி அந்த மாபெரும் தலைவர்களின் சிலைகளை திரைபோட்டு மூடுவதும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா விளம்பர தட்டிகளை எடுக்கச் சொல்வது ஏற்புடையது அல்ல;

கேட்டால், மதுராந்தகம் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் உள்ளது என்பது பொறுப்பற்ற பதில்; மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது; அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று தமிழ்நாடு முழுவதும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க புறப்பட்டு விடுவார்களோ இந்த அதிகார வர்க்கமும் தேர்தல் ஆணையமும்?.

காலில் பட்ட காயத்திற்கு தலையில் கட்டுப் போடுவதைப் போன்று உள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்; மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை காரணம் காட்டி அடுத்த சில நாட்களில் விழா நடைபெற வுள்ள பெரியார், அண்ணா பிறந்தநாள் பதாகைகளை செங்கல்பட்டு மாவட்டத்தில் நீக்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தேவையான வழிகாட்டுதலை தேர்தல் ஆணையமும் தமிழ் நாடு அரசும் வழங்க வேண்டுகின்றேன்.

என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்…

மல்லை சி ஏ சத்யா
தலைவர்
திராவிட வெற்றிக் கழகம்
10/09/2026.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை