Saturday, September 12, 2026

கனவை நனவாக்கிய விக்னேஸ்வரி: -ஃபென்சி அக்கடமி மூலம் அடுமனை (பேக்கரி) தொடக்கம்!

கோலாலம்பூர்,செப்.11-
சிறுவயது முதலே பேக்கரி தொழில் நாட்டத்திலும் அனிச்சல்(கேக்) தயாரிப்பிலும் பெரு நாட்டம் கொண்டிருந்த ஆர்வத்தை விடாமல் தொடர்ந்து வளர்த்து, இன்று அதேத் துறையில் சொந்த தொழிலை உருவாக்கியுள்ளார் விக்னேஸ்வரி நடராஜா.

அவரின் அயராத முயற்சியின் அடுத்தக் கட்டமாக ‘ஃபென்சி அக்கடாமி’ என்ற பெயரில் பேக்கரி பயிற்சி நிலையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் பழைய கிள்ளான் சாலை OUG Parklane பகுதியில் அமைந்துள்ள இந்த அக்கடாமி, பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு தங்களது திறமையை மேலும் டி வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது.

தன் பயணம் குறித்து விக்னேஸ்வரி நடராஜா கூறுகையில், சிறுவயது முதலே பேக்கரி துறையில் தனக்கு அதிக ஆர்வம் இருந்ததாகத் தெரிவித்தார்.

அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டதாகவும் பின்னர் தன் அனுபவத்தையும் திறமையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு சிலருக்கு கேக் தயாரிப்பு தொடர்பான பயிற்சியினை வழங்கியதாகவும் கூறினார்.

கேக் விற்பனையில் தொடங்கிய தன் வர்த்தகப் பயணம், தற்போது பயிற்சி வழங்கும் அக்கடாமியை தொடங்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

.

“சிறுவயதில் எனக்கு இருந்த விருப்பத்தை இன்று ஒரு சொந்தத் தொழிலாக மாற்றியுள்ளேன். ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் வியாபாரத்தை மேற்கொண்டேன். அதன் பின்னர் என்னிடம் கற்றுக்கொள்ள விரும்பிய சிலருக்கு பயிற்சி வழங்கினேன். அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாகவே தற்போது பென்சி அக்கடாமியை ஆரம்பித்துள்ளேன்” என விக்னேஸ்வரி தெரிவித்தார்.

அக்கடாமியின் திறப்பு விழா இன்று நடைப்பெறுகிறது. இதனை திறந்துவைக்க கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற் சங்கத்தின் தலைவர் வி.கே.கே.ராஜா வருகையளித்திருந்தார்.

தொடக்க விழாவே இன்னும் நிறைவு பெறவில்லை; அதற்குள்
இந்த குறுகிய நேரத்தில், 5 பேர் பயிற்சியில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தன் முயற்சிக்கு கிடைத்துள்ள ஆரம்பகட்ட வரவேற்பாக அமைந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், இந்த வார சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பென்சி அக்கடாமிக்கு நேரடியாக வந்து, அங்கு வழங்கப்படும் பயிற்சி, பாடத்திட்டங்கள் மற்றும் பேக்கரி துறை தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அக்கடாமியின் தொடக்கத்தை முன்னிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பதிவு செய்யும் புதிய பயிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்கள், குறிப்பாக கேக் தயாரிப்பு மற்றும் அதனை தொழிலாக முன்னெடுக்க விரும்புவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பென்சி அக்கடாமியை அணுகலாம் எனவும் விக்னேஸ்வரி நாராஜா தெரிவித்தார்.

சிறுவயது விருப்பத்தை விடாமுயற்சியுடன் வளர்த்து, சிறிய அளவிலான கேக் வியாபாரத்திலிருந்து பயிற்சி அக்கடாமி வரை தனது பயணத்தை முன்னெடுத்துள்ள விக்னேஸ்வரி நாராஜாவின் இந்த முயற்சி, பேக்கரி துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை