
‘Ehsan Group of Companies’ – ஏசான் குழும நிறுவனம் இதுவரை 8,000 குடியிருப்புகளை கட்டி உள்ளது என்று இக்குழுமத்தின் நிறுவனர்
டத்தோ அப்துல் ஹமீது தெரிவித்தார்.
ஏசான் குழும நிறுவனம் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும் 8 கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டுள்ள அதேவேளை, கெடா மாநிலத்தில் இரண்டு கட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏசான் நிறுவன குழுமம் ஜோகூரிலும் நில பரிவர்த்தனைத் தொழிலுடன் கட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது என்று ஏசான் குழும நிறுவனத்தின் தலைவர் டத்தோ
அப்துல் ஹமீது, இதன் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
2008-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஏசான் குடும்ப நிறுவனம் நாடு முழுவதும் சொத்து பரிவர்த்தனை தொழிலில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்த அவர், தரைவீடு கட்டுமான திட்டங்களையும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களையும் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

இன்று நீலாயில் செய்தியாளர்களை சிந்தித்த டத்தோ அப்துல் அமீது,
“பண்டார் பாரு நீலாயில் ஏசான் குழுமத்தின்
30 மாடிகள் கொண்ட ஏசான் வைடூரி ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் கட்டுமான நிலையில் இருக்கின்ற தற்போதைய நிலையிலேயே பரபரப்பான விற்பனையில் உள்ளன” என்றார்.
வீடமைப்பு கட்டுமான துறையில் Ehsan Property நிறுவனம் ஒரு புகழ்பெற்ற நிறுவனமாகும்.
நாடு தழுவிய அளவில் பல வீடமைப்பு திட்டங்களை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.

தற்போது மக்கள் நடமாட்டம் நிறைந்த பண்டார் பாரு நீலாயில் 30 மாடிகள் கொண்ட ஏசான் வைடூரி ஆடம்பர அடுக்குமாடியை
ஏசான் குழுமம் கட்டி வருகிறது.
“உங்கள் தேவைகளுக்கேற்ப நாங்கள் வீடுகளை உருவாக்குகிறோம் என்று Ehsan Property வர்த்தக குழுமத்தின் தலைவருமான டத்தோ பி.வி. அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
Ehsan Property என்பது எதிர்காலத்தை நோக்கிச் செயல்படும் ஒரு சொத்து மேம்பாட்டு நிறுவனமாகும். “தரமான வாழ்விடங்களை உருவாக்குவதில் தங்களின் நிறுவனம் உறுதியாக உள்ளது. வசதி, செயல்பாட்டுத் திறன் மற்றும் நீண்டகால மதிப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் வகையில் இவ்வாழ்விடங்கள் உருவாக்கப்படுகின்றன”.
எதிர்கால தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிடல், நிலையான வளர்ச்சிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்தல் ஆகிய இரு அம்சங்களை முதன்மையாகக் கொண்டு Ehsan Property நிறுவனம் செயல்படுகிறது இன்று அவர் தெரிவித்தார்.
Ehsan Property, சமூகங்களை மேம்படுத்தி, நவீன வாழ்க்கை முறைகளுக்கு ஆதரவளிக்கும் குடியிருப்பு திட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்களின் திட்டங்கள் நேர்மை, புதுமை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவைகளை ஆழமாகப் புரிந்துகொள்வது ஆகியவற்றின் அடிப்படையில் வழிநடத்தப்படுகின்றன.
அந்த வகையில் பண்டார் பாரு நீலாயில் கட்டப்பட்டு வரும் 30 மாடிகள் கொண்ட ஏசான் வைடூரி ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் பரபரப்பான விற்பனையில் உள்ளன என்று அவர் சொன்னார்.
இங்கிருந்து நீலாய் பல்கலைக்கழகம் 1 கிலோ மீட்டர் தொலைவிலும் Aurellus மெடிக்கல் சென்டர் 6 கிலோமீட்டர் தூரத்திலும் தேசிய சைக்கிள் ஓட்ட அரங்கம் 5 கிலோ மீட்டர் தொலைவிலும் பொது சந்தை(மார்க்கெட்) 1 கிலோ மீட்டர் தூரத்திலும் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம் -கேஎல்ஐஏ 18 கிலோமீட்டர் தொலைவிலும்தான் தான் உள்ளன.
ஏசான் வைடூரி ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பு அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

பலவிதமான மாதிரிகளில் வீடுகள் கட்டப்படுகின்றன.
வீட்டின் அளவு இடம்பெற்றுள்ள அறைகள் ஆகியவற்றைப் பொறுத்து 2 லட்சத்து 96,000 வெள்ளி முதல் 4 5 லட்சம் வெள்ளி வரையிலான விலையில் வீடுகள் உள்ளன.
உங்கள் வசதிக்கு ஏற்ப அதற்கு ஏற்றவாறு வீடுகளை வாங்கிக் கொள்ளலாம் .
ஏசான் வைடூரி கேலரியில் வீடுகளை பார்வையிட்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.
வீடுகள் தற்போது பரபரப்பான விற்பனையில் உள்ளதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தவிர, வீடுகள் வாங்குவதற்கான வழக்கறிஞர் கட்டணமும் இலவசம்.
30 விதமான அடிப்படை சேவைகளை ஏசான் வர்த்தகக் குழுமம் வழங்குகிறது என்றும் அவர் சொன்னார்.
மேல் விவரத்திற்கு 03-2162 6649 என்ற எண்ணுடன் அலுவலக நேரத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


