Thursday, April 2, 2026

பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர்கள் விவகாரம்: -குரல்கொடுக்கும் ஒரே அரசியல் தலைவர் பொன். வேதமூர்த்தி

பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் குடியிருப்பாளர்கள் காலம் காலமாக சட்டபூர்வமாக வசிப்பவர்கள். இவர்களை வெளியேறும்படி சட்டத்திற்கு புறம்பாக கோம்பாக் மாவட்ட நில அலுவலகத்தின் சார்பில் ஷாருல் ஃபாஹிமி பின் அஷாரி என்ற அதிகாரி 2024 செப்டம்பர் பத்தாம் நாள் தேதியிட்டு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

நில பட்டாவை பெற்று நீர் வசதி மின் வசதியுடன் மூன்றாவது நான்காவது தலைமுறையாக வாழ்கின்ற இந்திய குடும்பங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருப்பவர்கள் என்று சொல்லி முத்திரை குத்தி அவர்களை வெளியேறும்படி உத்தரவிட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை என்றும் இதை உடனே நிறுத்தும் படியும் கேட்டு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு கடிதம் அனுப்பியதுடன் இந்த சிக்கலால் அல்லல்படுகின்ற மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்ற ஒரே இந்தியத் தலைவர் மலேசிய முன்னேற்ற கட்சி- எம்ஏபி தேசியத் தலைவர் பொன். வேதமூர்த்தி என்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு நடவடிக்கை செயல்பாட்டாளர் சேரன் தெரிவித்துள்ளார்.

காலம் காலமாக இங்கேயே வசிக்கும் இந்த குடும்பங்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் இதன் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குடியிருப்பாளர்களின் நலனில் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அமிருடின் ஷாரியை பொன். வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார் என்று சேரன் மேலும் தெரிவித்தார்.

மலாக்கா செட்டி குடியிருப்பிற்கு அடுத்து பத்து மலை இந்தியன் செட்டில்மெண்ட் பகுதிதான் பாரம்பரியமாக இந்திய குடும்பங்கள் வசிக்கின்ற செட்டில்மெண்ட் பகுதியாகும்.

50க்கு மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்ற நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக நில பட்டாக்களை அரசாங்கமே வழங்கி இருக்கின்ற நிலையில் இப்பொழுது நில ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும் என்று சேரன் தலைமையிலான குழுவினர் போராடி வருகின்ற நிலையில் தங்களின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பும் சட்ட பாதுகாப்பும் அளித்து வருகின்ற தலைவர் பொன் வேதமூர்த்திதான் என்று சேரன் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை