Sunday, September 13, 2026

பக்கத்தான் இந்தியத் தலைவர்கள் அன்வாரின் அடிமையராக உருமாற்றம்!

பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்த 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மலேசிய இந்திய சமூகத்திற்கு அவரின் தலைமையிலான அரசாங்கம் செய்யும் பாசாங்குத்தனத்தையும் திட்டமிட்ட துரோகத்தையும் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ள நிலையில் பக்கத்தான் கூட்டணியைச் சேர்ந்த இந்திய தலைவர்கள் இது குறித்து எதுவும் பேசாமல் மௌனித்துவிட்டன என்று
மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி. ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அன்வார் பிரதமர் ஆனால் வானளவுக்கு செய்வார் என்று மலேசிய இந்திய சமுதாயம் எதிர்பார்த்திருந்த நிலையில், இவர் கடுகளவும் புதிதாக எதுவும் செய்யவில்லை; மாறாக இருப்பதை எல்லாம் இல்லாமல் செய்து வருகிறார்.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தமிழ் பள்ளிகளுக்கு தனியே மானியம் ஒதுக்கப்பட்டு வந்ததை பி கே ஆர் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் அதை இல்லாமல் செய்து விட்டது; அதைப்போல அன்வார் பிரதமராக இருக்கும் இன்றைய அமைச்சரவையில் தமிழ்ப் பேசும் அமைச்சரையும் இல்லாமல் செய்து விட்டார்;

நான்கு பட்ஜெட்டுகளை நிறைவேற்றி விட்டதாக பெருமை பேசிக் கொள்ளும் மடாணி அரசு, இந்த காலகட்டத்தில் இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பிற்காக அளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றது.

ஏமாற்று வேலையாகத் தெரிகிற இந்த விவகாரம் குறித்தும் பி கே ஆர் & ஜ.செ.க. கட்சிகளைச் சேர்ந்த இந்திய எம்பிக்கள் பன்னிருவர், சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேரில் ஒருவர் கூட வாய் திறப்பதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக மலாயா பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப் போல பிரதமர் அன்வாரும் இந்தியத் தலைவர்களைப் பிரித்தாளுகிறார்.

இவற்றையெல்லாம் கண்டும் பக்கத்தான் கூட்டணியை சேர்ந்த இந்திய மக்கள் பிரதிநிதிகள் இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுக்காமல் மௌனமாகிய கிடக்கின்றனர் என்றால் ஒன்று அவர்கள் தங்களின் எதிர்கால பதவி குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அன்வாரின் அடிமையராக உருமாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று சரித்திர சாதனை இயக்கம் ஹிண்ட்ராப் ஜோகூர் மாநிலத் தலைவருமான மோகன் எல்லப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை