Thursday, April 2, 2026

பூனைக்குட்டி வெளியில் தெரிகிறது! பொன். வேதமூர்த்தி சொன்னது உண்மையாகி விட்டது!! -உள்துறை அமைச்சரும் வெறுப்புப் பேச்சரும் குலாவல்!

மலேசியாவின் இறையாண்மைக்கு அடித்தளமாகவும் ஆதாரமாகவும் இருப்பவை சமய நல்லிணக்கமும் சமூக ஒருமைப்பாடும்-தான். இவற்றைக் கெடுக்கும் நோக்கில் மலேசியக் கூட்டு சமுதாயத்தில் சலசலப்பை-யும் முறுகல் நிலையையும் ஏற்படுத்தும் விதமாக பன்றி பண்ணை விவகாரத்தையும் ‘கோயில் ஹராம்’ என்னும் சிக்கலையும் செயற்கையாக ஏற்படுத்தி ஒன்றுபட்ட சமு-தாயத்தில் பிரிவினையையும் பேதத்தையும் ஏற்படுத்துகின்ற தரப்பினருக்குப் பின்னால் மறைமுக கைகள் இருக்கின்றன என்று மலேசிய முன்னேற்ற கட்சி-எம்.ஏ.பி. தலை-வர் பொன். வேதமூர்த்தி நாட்டு மக்களுக்கு அடிக்கடி கூறி வந்தது, சமய வெறுப்புப் பேச்சாளர் சம்ரி வினோத்தும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடீன் நசுத்தியோனும் இன்பம்பொங்க குலாவிய வண்ணம் பேசியக் காட்சி வெளிச்சத்திற்கு வந்ததன்மூலம் உண்மையாகிவிட்டது என்று எம்.ஏ.பி. தேசிய உதவித் தலைவர் மோகன் எல்லப்பன் தெரிவித்துள்ளார்.

மடாணி முழக்கத்துடன் ஒற்றுமை அரசாங்-கத்தை வழிநடத்துகின்ற அன்வாரின் பிரதமர் பதவி, அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று பிரதமர் அன்வாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது; அதைப்போல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அன்வார் தன்னிச்சையாகசெய்து கொண்ட ‘ஏஆர்டி’ வர்த்தக ஒப்பந்தம் மலேசிய இறையாண்மைக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியது என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன் வேதமூர்த்தி தெரி-வித்த கருத்து தேசிய அரசியல் களத்தில் அன்வாருக்கு எதிரான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நெருக்கடியை திசை திருப்பத்தான் சமூகத்தில் செயற்கையாக பிரிவினை-வாதம் பேசப்படுகிறது என்றும் இதற்குப் பின்னால் மறைமுக கைகள் உள்ளன என்றும் சட்ட வல்லுநருமான பொன் வேதமூர்த்தி சொல்லிவந்த கருத்து இன்று மெய்ப்பட்டிருக்கிறது.

ஒன்றுபட்ட சமுதாயத்தில் பிரச்சனை ஏற்படுத்தி வருகின்ற நபரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு பதிலாக அவருடன் தனிப்பட்ட முறையில் சிரித்து பேசுவதையும் அளவளாவுவதையும் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்று எம்.ஏ.பி. ஜோகூர் மாநிலத் தலைவருமான மோகன் எல்லப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை