Thursday, April 16, 2026

தேசிய காவல்படை தினம்!மாமன்னர் வாழ்த்து!!

தேசிய காவல் படையின் 219வது ஆண்டு தினம் இனறு கோண்டாடப் படுவதை ஒட்டி, மாண்புசால் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காவல்துறை வீரர்கள், அதிகாரிகள் முன்னாள் அதிகாரிகள், வீரர்களுக்கும் போலீஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் மாமன்னர்.

அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம், மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ஆற்றிய பங்கு குறித்தும் பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்காக காவல் துறை வீரர்கள் எப்போதும் எந்தச் சூழலிலும் தயாராக இருப்பதை சுட்டிக் காட்டிய அவர்,

காவல்துறை வீரர்கள் விழாக்காலங்களிலும் அவசரநிலை வேளையிலும் தங்கள் கடமையை நிறைவேற்றும் அர்ப்பணிப்புத் தன்மை கொண்டவர்கள் என்று பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை