Saturday, August 1, 2026

முகலாயப் பேரரசை விரிவுபடுத்திய ஔரங்கசீப் பதவியேற்ற நாள்!

1658-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் இதே நாளில், ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக முடிசூடினார். 56 தேசங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இன்றைய இந்தியா ஒரு துணைகண்டமாக உருவாவதற்கு வழிகோலியவர் இவர்தான். ஏறக்குறைய அரைநூற்றாண்டு காலம் இந்தியாவை ஆண்ட இவர்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் ஔரங்க சீப் சிறந்த ஆட்சியாளர் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

ஆடம்பர வாழ்வைத் தவிர்த்த இவர், ஓய்வு நேரத்தில் இஸ்லாமிய மறை நூல் திருக்குரானை கையெழுத்துப் பிரதிகலாகத் தயாரித்து அவற்றை விற்ற பணத்தை சேர்த்து வைத்தார்.

மரணத் தறுவாயில் அந்தப் பணத்தைக் கொண்டுதான் தனக்கு பிணப்பெட்டியையும் அதன்மீது போற்றும் துணியையும் வாங்க வேண்டும் என அரண்மனை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாராம்.

மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்காமல், பார்த்துப் பார்த்து செலவு செய்த மாமன்னர் ஔரங்கசீப்பிற்கு வரலாற்றில் என்றும் இடம் உண்டு.

இன்றைய அரசியல் சூழலில், தலைவர்கள் பெரும்பாலும் ஆடம்பர வாகனங்கள், அரண்மனை போன்ற வீடுகள், மற்றும் அரசின் வளங்களை தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறார்கள்.

மக்களின் வரிப்பணம், பொதுநலத்திற்குப் பதிலாக தனிப்பட்ட ஆடம்பரத்திற்குச் செலவாகிறது என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுகின்றன.

இந்த நிலையில், ஔரங்கசீப்பின் வாழ்க்கை ஒரு கண்ணாடியைப் போன்றது. அவர் காட்டிய எளிமை, அரசியல் தலைவர்களுக்கு ஒரு பாடமாகவே பார்க்கப்படுகிறது:
மக்களின் பணத்தை வீணாக்காமல், பொறுப்புடன் பயன்படுத்துதல்; தனிப்பட்ட வாழ்வில் எளிமையை கடைபிடித்தல், ஆட்சியில் ஒழுக்கம், நிதிக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் ஔரங்கசீப் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

ஔரங்கசீப்பின் ஆட்சி, அரசியல் வலிமையையும் சமய ஒழுக்கத்தையும் இணைத்த ஒரு காலமாகும். அவர் காட்டிய எளிமை, அரசியல் தலைவர்களின் வாழ்க்கை முறையில் ஒரு பாடமாகவே பார்க்கப்படுகிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை