Monday, September 14, 2026

கோர்ட்டு மலை விநாயகர் ஆலய சதுர்த்தி விழா!-டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் 2,000 பேருக்கு அன்னதானம்!

கோர்ட்டுமலை அருள்மிகு கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பக்தி பெருகுடன் சிறப்பான முறையில் இன்று நடைபெற்று வருகிறது.

காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து விநாயகப் பெருமானை வணங்கி அருளையும் நாடிச் செல்கின்ற வேளையில் தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் தலைமையில் 2,000 பேர்வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

விநாயகப் பெருமானுக்கு முதன்மை விழாவான விநாயர் சதூர்த்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் மலேசியாவிலும் குறிப்பாக தலைநகரில் கோர்ட்டுமலை அருள்மிகு
பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று இரவு தங்கரத ஊர்வலத்துடன் தொடங்கியது.

கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கொடியேற்றி இவ்விழாவை தொடக்கி வைத்தார்.

இன்று அதிகாலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூசையுடன் வழிபாடு நடைபெற்று வருகின்றது.

அதே வேளையில் பக்தர்கள் திரளாக வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர்.

திங்கட்கிழமை என்பதால் பக்தர்கள் கட்டங்கட்டமாக ஆலயத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
மாலையில் அதிகமான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதி-பாதுகாப்பை முன்னிட்டு தேவஸ்தானத்தின் சார்பில் உரிய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை