Tuesday, September 22, 2026

இந்து கோயில்கள் குறித்து அபாய கட்டமைப்பு!அன்வாரின் ஊதுகுழலாக பாப்பா ராய்டு-ஹன்னா இயோ!!

சிலாங்கூரில் 688 கோவில்கள் அங்கீகரிக்கப் படாதவை என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டுவும் கோலாலம்-பூரில் 163 கோவில்கள் பதிவுபெறாதவை என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோவும் செய்துள்ள அண்மைய அறிவிப்-பும் தரவும் அபாயகர கட்டமைப்பு என்று முன்னாள் அமைச்சர் பொன். வேதமூர்த்தி எச்சரித்துள்ளார்.

இந்தக் கோவில்களின் வரலாற்று அடிப் படையை மறைத்து, பொத்தாம் பொதுவாக ‘சட்டவிரோதமானவை’ என்று முத்திரை குத்துவது பொறுப்பற்ற செயலாகும்.

ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, பிரிட்டிஷ் காலத்து குடியேற்றம் மற்றும் குடியமர்வுக் கொள்கை தொடர்பான வரலாற்றுப் பதிவுகளை மறுவகைப்படுத்து-மாறு கடந்த ஓராண்டு காலமாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்.ஏ.பி.யும் ஹிண்ட்-ராஃப் இயக்கமும் பிரதமரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆனால், பிரதமர் இந்தக் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்; சட்ட விரோத வழிபாட்டுத் தலங்கள் என்ற முத்திரை மூலம் முதன்முதலில் கடந்த 2025 மார்ச்-ல் சலசலப்பை ஏற்படுத்தியவர் பிரதமர் அன்வார்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

சிலாங்கூரில் 688 கோவில்களும் கோலா-லம்பூரில் 163 ஆலயங்களும் பதிவு பெறா-தவை என்பதற்கான உண்மைத் தகவலும் முழு விவரமும் எங்கே யென்று எம்.ஏ.பி. தலைவருமான பொன்.வேதமூர்த்தி வினா எழுப்பி உள்ளார்.

புதிய நிலச் சட்டங்கள் வரையப்படுவதற்கு முன், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை கோயில்கள் செயல்படுகின்றன?

இந்தக் கோயில்களில், எத்தனை முன்னாள் தோட்டங்களில் கட்டப்பட்டன? எத்தனைக் கோயில்கள் காலனித்துவ ஆட்சிக் காலத்-தில் உருவாயின? சுதந்திர மலேசியாவில் அரசாங்க நிலத்தில் எத்தனை ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்பதற்கான விளக்கம் எங்கே?

இதற்கெல்லாம் பதில் இல்லாமல், மொத்த-மாக ‘அங்கீகரிக்கப்படாதவை என்றும் அல்லது ‘அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டவை’ என்றும் கூறுவது, இந்தப் பிரச்சினையை மூடிமறைப்பதற்காகக் கூறப்படும் புனைக் கதையாகும்.

இந்திய சமூகம் தற்செயலாக மலாயாவிற்கு வரவில்லை. இந்த தேசத்தின் பொருளாதார அடித்தளமாக தோட்டங்கள் இருந்தபொழுது அவற்றை வளப்படுத்தவும் ரயில் பாதைகள்-சாலைகளை அமைக்கவும் பொது நிறு-வனங்களைக் கட்டவும் அப்போதைய மலாய் ஆட்சியாளர்களின் ஒப்புதலுடன் பிரிட்டிஷ் நிருவாகத்தின்கீழ் அவர்கள் இங்கு அழைத்துவரப் பட்டனர்.

அப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த இடங்கள், தற்காலிக தொழிலாளர் முகாம்களாக அல்லாமல், நிரந்தரக் குடியிருப்புகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டமைக்கப்பட்டன; வழிபாட்டுத் தலங்களும் உருவாக்கப் பட்டன.

கோயில்கள், பிற்காலத்தில் உருவாக்கப் பட்டவை அல்ல. அவை, அப்போதைய அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்டவை; கட்டமைக்கப்பட்ட சமூக அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தன. அத்துடன் தோட்டப் பாட்டாளி சமூகம் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் நிலைத்திருப்பதற்கும் வழிவகுத்தன. அதேவேளை, அப்போது அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததால், அவர்களின் குடியிருப்பு-களுக்கோ அல்லது வழிபாட்டுத் தலங்க-ளுக்கோ நிலப் பட்டாக்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியாமல்போனது.

காலம் கடந்துவிட்ட நிலையில், அதேக் கோயில்களை இப்பொழுது ‘அங்கீகரிக்கப்-படாதவை’ என்றும் ‘அரசு நிலத்தில் கட்டப் பட்டவை’ என்றும் முத்திரை குத்தி, வரலாற்றை மாற்றி எழுத முயற்சிப்பது, பாரம்பரியத்தைக் குற்றமாக்குவதற்கு சமம்.

இந்தப் போக்கு, பொதுமக்களிடையே தவறான புரிதலைத் தூண்டி, தீவிரவாதப் பேச்சுகளுக்கு ஊக்கமளித்து, நம் பல்லின சமூகத்தை சிதைக்கக்கூடியது;

“எனவேதான், இதன் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகி-றோம். ஒருவேளை பாப்பா ராய்டுவும் ஹன்னா இயோவும் மதானி முழக்கத்துடன் அரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமருக்குப் பின்வரும் ஆலோசனைகள வழங்கலாம்” என்று சட்டவல்லுநருமான பொன்.வேத மூர்த்தி தெரிவித்துள்ளார்.

(1) காலனித்துவக் குடியேற்றம் மற்றும் குடியமர்வுக் கொள்கைகள் குறித்த அனைத்து வரலாற்றுப் பதிவுகளையும் இரகசியமற்றதாக அறிவிக்க வேண்டும்

(2) இந்தக் கோயில்களின் உண்மையான தோற்றத்தையும் தோட்டம் அல்லது அரசாங்கத்துடன் தொடர்புடையதா என்பதையும் வெளியிட வேண்டும்

(3) முழுமையான வரலாற்றுப் பின்னணி நிறுவப்படும்வரை, ‘அங்கீகரிக்கப்படாத ஆலயம்’, ‘அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டவை’ என்று வகைப்படுத்துவதை நிறுத்த வேண்டும்

(4) வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட கோயில்-களை தேசிய பாரம்பரியத்தின் ஒரு பகுதி-யாக அங்கீகரிக்க வேண்டும்;

என்ற கோரிக்கைகளையும் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்வைத்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை