
ரவாங் தமிழ்ப் பள்ளி திடலுக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாக ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
பழைய கட்டடம் மோசமான நிலையில் இருக்கும் நிலையில், அதை இடித்து 3 மாடி கட்டடம் கட்டுவதற்குப் பதிலாக தமிழ் பள்ளி திடலில் கை வைப்பது ஏன் என
பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அனுமதி கிடைத்துள்ள நிலையில் அது ஒரு வரவேற்க கூடிய விஷயமாக இருந்தாலும் அந்த கட்டுமானத்திற்காக மாணவர்கள் விளையாட இருக்கும் திடலை பலி கொடுப்பது நியாமான செயல் இல்லை என பெற்றோர்கள் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இருக்கும் ஒரேத் திடலை தாரைவார்த்தால் மாணவர் எங்கு போய் விளையாடுவார்கள்?
இருப்பதே ஒரு சிறிய திடல்; அதையும் கூறுபோடுவது நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

திடலுக்கு அருகே ஒரு பலகைக் மோசமான சூழலில் இருக்கும் நிலையில் அதை உடைத்து அங்கு 3 அல்லது 4 மாடிக் கட்டடத்தை கட்டலாம்.
அதைவிடுத்து திடலில் கை வைப்பது ஏன் ? திடலை இழந்துவிட்டு மாணவர்கள் விளையாட ,பயிற்சி எடுக்க எங்கே செல்வார்கள்?
பக்கத்து பள்ளியில் கையேந்தி நிற்கும் சூழலை தயவு செய்து உருவாக்கி விடாதீர்கள்.
கல்வி அமைச்சு மற்றும் பள்ளி நிர்வாகம் இதனை மறு பரிசீலனை செய்து திடலில் கை வைப்பதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி வரும் ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 2 ஆம் நாள் பெற்றோர்களும் அவ்வட்டார இந்திய மக்களும் ரவாங் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் காலை 8:30 மணி அளவில் ஒன்றுகூடி தங்களின் எதிர்ப்பை கல்வி அமைச்சுக்கும் பள்ளி நிர்வாகதிற்கும் தெரிவிக்கவுள்ளனர்.


