Monday, July 13, 2026

வாசிப்பு மாதம் ஜூலை முழுவதும் 50% தள்ளுபடி விலையில் புத்தக விற்பனை! -டத்தோ கு. செல்வராஜ்

கோலாலம்பூரில் நூற்கடலைப் போன்ற ஜெய பக்தி புத்தக நிறுவனத்தில் நிகழும் வாசிப்பு மாதமான ஜூலைத் திங்கள் முழுவதும் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படும் என்று ஜெயபக்தி நூல் வெளியீட்டு- விற்பனை நிறுவனத்தின் தலைவர் டத்தோ கு. செல்வராஜ் தெரிவித்தார்.

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஜூலை மாதத்தை வாசிப்பு மாதமாக கடைபிடிப்பது பொதுவான வழக்காக இருக்கும் நிலையில் ஜெயபக்தி குயில் நிறுவனமும் அதை ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகிறது என்று தெரிவித்த டாக்டர் செல்வராஜ்,

பொதுவாக ஒவ்வொரு மனிதரும் எந்த அளவிற்கு கற்கின்றனரோ; நூல்களை வாசிக்கின்றனர் அதற்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனும் சிந்தனையால் சிற்பம் பெறுவர் என்பதை எத்தனையோ சான்றோர் பெருமக்களின் வாழ்க்கை நிரூபித்துள்ளது என்றார்.

அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் நூல் அளவே ஆகுமாம் மாந்தர்க்கு நுண்ணறிவு என்னும் அனுபவமொழி தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது.

பொய்யாமொழிப் புலவர் வள்ளுவப் பெருந்தகை வடித்தத் திருக்குறளில் இடம் பெற்றுள்ள
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு என்னும் திருக்குறளும் வாசிப்பை நேசிப்பதன் அவசியத்தை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான நூல்கள் தவிர பொதுவான கல்வியியல் சட்டம் வரலாறு மொழி இலக்கியம் புவியியல் சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்கள் தங்கள் ஜெய பக்தி நிறுவனத்தில் வாசிப்பாளர்களின் நேசிப்பிற்காக வைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் இந்த மாதத்தில் ஜெய் பக்தி குயில் நிறுவனத்திற்கு வருகை தந்து தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்ற நூல்களை சலுகை விலையில் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்வதாக இதன் தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ செல்வராஜ் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட நூல்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி சலுகை அளிப்பதைப் போல உள்நாட்டு நூல்களுக்கும் 20 விழுக்காடு தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சலுகை நிகழும் ஜூலை மாதம் முழுவதும் நீடிக்கும்.

‘நாலும் தெரிய நாளும் படிப்போம்’ என்பதே ஜெயபக்தி நிறுவனத்தின் தாரகமந்திரம்; முழக்கம்.

இதை தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மொத்தத்தில் பொதுமக்களுக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்து உங்கள் அனைவரையும் வரவேற்க ஜெய பக்தி குயில் நிறுவனம் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தடத்தோ செல்வராஜ், நேரில்வர இயலாதவர்கள்
www.jeyabalthi,com.my என்னும் இணைய பக்கத்தின் ஊடாகவும் நூல்களை வாங்கலாம் என்று தெரிவித்தார்.

வாசிப்பு மாதம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து வாசிப்பு மாத சிந்தனையை ஊக்குவிப்புதற்காக பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தர சுந்தரராஜு சோமு சிறப்பு வருகைதர இருப்பதாகவும் டாக்டர் குயில் செல்வராஜ் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை