Monday, August 24, 2026

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்: துன் சம்பந்தன் கல்வி அறநிதி வாரிய கல்வி நிதி உதவி!

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் நிறுவியுள்ள துன்சம்பந்தன் கல்விஅறநிதி வாரியத்தின் சார்பில் 2026- 2027 தவணைக்கான உயர்க்கல்வி(Under Graduate) மாணவர்களிடமிருந்து கல்வி நிதி உதவி மற்றும் கல்விக் கடன் வசதிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசாங்க பல்கலைக்கழகம் அல்லது தனியார் உயர்க்கல்வி நிலையங்களில் இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மலேசிய குடியுரிமை பெற்ற மாணவர்களிடமிருந்து துன்சம்பந்தன் கல்வி அறநிதி வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவிநிதி அல்லது கல்விக் கடன் வசதி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன் தொடர்பில் விண்ணப்ப படிவங்களைப் பெற விரும்புவோர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு எழுதி பெற்றுக்கொள்ளலாம்.

செயலாளர்
துன் சம்மந்தன் கல்வி அறநிதி வாரியம்
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்
விஸ்மா துன் சம்பந்தன் 10-ஆவது மாடி
ஜாலான் சுல்தான் சுலைமான்
அஞ்சல் பெட்டி எண்: 12133
50768 – கோலாலம்பூர்.

Tun Sambanthan Scholarship Foundation
Koperasi NLFCS Berhad
Wisma Tun Sambanthan – Level 10
Jalan Sultan Sulaiman
Peti Surat 12133
50768 Kuala Lumpur.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்படும்.

மனுதாரர்கள் நிறைவு செய்து அனுப்பும் விண்ணப்ப படிவங்களில் மனுதாரரின் முழு விபரம் குடும்ப பொருளாதார நிலை, கல்வி பயிலும் துறை போன்ற விபரங்களுடன் எஸ்டிபிஎம்/மெட்ரிக்குலேஷன் தேர்வு முடிவுகள் பற்றிய முழு விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 2026 செப்டம்பர் 15 ஆம் நாளுக்குள் துன்சம்பந்தன் கல்வி அறவாரிய செயலாளருக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை