
(செ.வே. முத்தமிழ் மன்னன்)
கோலாலம்பூர்
ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் மிகவும் பிரபலமான வீர பத்ர காளியம்மன் கோயில் இடம் மாறுவதன் தொடர்பில் புதிய கட்டுமானப் பணிகளை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று நேரில் பார்வையிட்டார்.
இன்று காலை 11:00 மணியளவில் கோயிலுக்கு வருகைதந்த அவரை, கோயில் தலைவர் பார்த்தீபன் வரவேற்றார்.
பின்னர் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட கோபிந்த் சிங் டியோ-வுக்கு பொன்னாடை போத்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
கோயில் நிர்வாகம் கொடுத்த மரியாதையை ஏற்றுக் கொள்ள கோபிந்த் சிங், டியோ, பிறகு புதிய கோயில் கட்டப்படும் இடத்தை பார்வையிட்டார்.
இரண்டு மாடிகள் கொண்ட புதிய கோயில் கட்டுமான பணிகள் தொடர்பாக கோயில் நிர்வாகம் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவுக்கு விளக்கம் அளித்தது.

கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்.
கோயில் திருப்பணி வெற்றிகரமாக பூர்த்தி அடைய முழு ஆதரவு வழங்கி வருவதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இதனிடையே கோயில் தலைவர் பார்த்தீபன் பேசுகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசிற்கும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அரசாங்கம் வழங்கி வரும் உதவிகளுக்கு மனமார்ந்த நன்றியைப் புலப்படுத்திய அவர்,
கோயில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.
கட்டுமான பணிக்கு நிதி தேவைப்படுவதால் பொதுமக்கள் நன்கொடை கொடுத்து ஆதரவு தரும் படி அவர் கேட்டுக் கொண்டார்.


