
(அரசியல் அலசல்)
எம். ஏ. அலி
தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும்
சுயநல அரசியலின் வெளிப்பாடாக கரம் கோத்து இருப்பதை மலேசியர்கள் வரவேற்பார்களா?
இந்த இரண்டு தரப்பினரின் அரசியல் நகர்வு, சுயநலத்தை அடிப்படையாக் கொண்டது என்ற கருத்தினை நம்பிக்கைக் கூட்டணியும் அரசியல் நோக்கர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அப்படி இது உண்மையாக இருக்குமானால் இந்த அரசியலை மக்கள் புறக்கணித்து எதிர்வரும் 16-ஆவது பொதுத்தேர்தலில் டத்தோஸ்ரீ அன்வாருக்கு மக்கள் மகத்தான ஆதரவை தருவார்களா?
மலேசிய அரசியல் என்பது, பல இன மக்களின் ஒருமைப்பாடு, புரிந்துணர்வு, நல்லிணக்க அடிப்படையிலான அரசியலாகும்.
நாட்டின் சுதந்திர தந்தை துங்கு அப்துல் ரகுமான் இந்த கருந்தினை ஆணித்தரமாக வலிறுத்தியிருக்கிறார்.

மேலும் தேசிய முன்னணியின் சுமார் 60 ஆண்டுகால ஆட்சி என்பது இதையே அ டிப்படையாக கொண்டிருந்தது.
அம்னோ, ம.சீ.ச, மஇகா, கெராக்கான், உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி பலத்துடன் சுமார் 60 ஆண்டுகால ஆட்சியை தேசிய முன்னணி வழங்கியது.
தேசிய முன்னணி குறிப்பாக, அதன் தலைமை அம்னோ, தேசிய முன்னணியின் பாரம்பரிய கொள்கையை விட்டுவிட்டு ஆட்சி அதிகாரத்தை மட்டுமே முன்நிறுத்தி நகர தொடங்கியது.
பன்னிரண்டாவது(2008) பொதுத் தேர்தலுக்கு பிறகு அனைத்தும் தலைகீழ்ஆயின. இதனைத் தொடர்ந்து அம்னோ தனக்கான தனி(பதவி மோக) அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கியது.

இதனால் மசீச, மஇகா அதிர்ப்தி அடைந்த கதை அனைவருக்கும் தெரியும்.
முன்னதாகவே கெராக்கான் தேசிய முன்னணியை விட்டு விலகியது!
மசீச, மஇகா ஆகிய இரண்டு கட்சிகளும் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவோம் என்று கூறிக்கொண்டன. அதன்பிறகு மசீச அதிலிருந்து பின் வாங்கியது. மஇகா பேராளர்கள் முடிவே கட்சியின் முடிவு என்று கூறி கூட்டமும் நடத்தி வெளியேறு வோம் என்ற முடிவு எடுக்கபட்டு, அந்த அதிகாரத்தை கட்சி தலைமையிடமே ஒப்படைக்கிறோம் என்று சொல்லி தற்போது என்ன நிலை என்பதை நாடறியும்; நாமறிவோம்.
தேசிய முன்னணியோடு பாஸ்:
ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணி (அம்னோ) பெரிக்கத்தான் நேஷனல்(பாஸ்) கைகோத்து இருக்கும் நிலையில் மஇகா வின் நிலைப்பாடு என்ன என்பதனை இந்திய சமுதாயத்திற்கு ம இகா தலைமை தெளிவான விளக்கத்தைத் தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறது.



