Thursday, September 17, 2026

மலாக்கா சட்டமன்றத் தேர்தல்: காடேக் மஇகா வேட்பாளர் நடராஜன் செல்லப்பா!

மலாக்கா மாநில சட்டமன்றத்திற்கு விரைவில் நடைபெற இருக்கும் தேர்தலில், மஇகா சார்பில் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணி வேட்பாளர், நடராஜன் செல்லப்பா என்று மாநில மஇகா வட்டத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேற்தலின்போதே இவர் களமிறக்கப்பட இருந்ததாகவும் கடைசி நேரத்தில்தான் தற்போதைய ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சண்முகம் பிச்சை காடேக் தொகுதியில் களமிறக்கப்பட்ட தாகவும் தெரிகிறது.

இன்று செப்டம்பர் 18 வெள்ளிக்கிழமை பிற்பகலில் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் மலாக்கா மாநில சட்ட மன்றம், ஒருவேளை இன்று தப்பினாலும் அடுத்த பணி நாளான செப்டம்பர் 21-ஆம் நாள் திங்கள்னறு உறுதியாக கலைக்கப் படும் என்று மலாக்கா மாநில அரசியல் வட்டத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவி-லும் கருத்து பரிமாறப்படுகிறது.

மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட பின், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்க இருக்கும் நிலையில், இந்த முறை பி.சண்முகத்திற்குப் பதிலாக மாநில மஇகா துணைத் தலைவரும் அலோர் காஜா தொகுதி துணைத் தலைவருமான செ. நட ராசன் களமிறக்கப்படுவார் என்று பலமாக பேசப்படுகிறது.

மஇகா எல்லையைக் கடந்தும், மலாக்கா மாநிலத் தேர்தல் தேசிய அளவில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காரணம் நாட்டின் தென்புலத்தில் அடுத்-தடுத்து நடைபெற்ற இரு சட்டமன்ற தேர்தல்களிலும் நாட்டை ஆளுகின்ற ஒற்றுமை அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கின்ற மக்கள் நீதி கட்சி-பிகேஆர் மட்டுமல்லாமல் அதன் தலைமையிலான நம்பிக்கை கூட்டணியும் தோல்வியை சந்தித்தது.

இரு வார இடைவெளியில் நடைபெற்ற ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பிரதமருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் நடைபெற இருக்கின்ற அதே தென்புலத்தை சேர்ந்த மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிக் கணக்கை நிலைநாட்ட விரும்பு-கிறது பிகேஆர்.

குறிப்பாக நெகிரி செம்பிலான்-ஜோகூர் மாநிலங்களுக்கு இடையில் அமைந்திருக்-கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது தன்னுடைய மாண்பையும் பெருமையையும் குறிப்பாக பி கே ஆர் கட்சிக்கான வெற்றியை நிலைநாட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இருப்பு கொள்ளாமல் தகித்து வருகிறார்.

நடப்பு மலாக்கா அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாகவும் தேசிய முன்னணி குறிப்பாக மஇகா சார்பில் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் மாநில மஇகா தலைவராகவும் இருக்கின்ற சண்முகம் பிச்சைக்கு, தொடர்ந்து வாய்ப்பு இல்லை என்று மலாக்கா மஇகா வட்டாரத்தில் பெரிதும் பேசப்படுகிறது.

தேசிய முன்னணியின் கோட்டையான காடேக் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து அம்னோ வெற்றிபெற்றுவந்த நிலையில், 2013-இல் இந்தத் தொகுதி மஇகாவிற்கு மாற்றிவிடப் பட்டது.

அப்போது களமிறங்கிய டத்தோ மகாதேவன் பிகேஆர் வேட்பாளர் கோ.இராஜேந்திரனை மிகப்பெரிய வாக்கு வேறுபாட்டில் வெற்றி கொண்டதுடன் மாநில ஆட்சிக் குழுவிலும் இடம்பெற்றார்.

அதற்கு முன்பே மாநில முதல்வரின் சிறப்பு அதிகாரியாக(இந்திய சமுதாய பிரதிநிதி-யாக) செயல்பட்ட மகாதேவன், மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெற்ற நிலையிலும் மாநில முதல்வரின் சிறப்பு அதிகாரியாகத் தொடர்ந்ததால், மிகவும் செல்வாக்குடன் விளங்கினார்.

2018 சட்டமன்றத் தேற்தலின்போது, இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ம்இகா-வின் அந்நாளையத் தலைவர் ‘நினைவில் வாழும்’ டத்தோஸ்ரீ கோ. பழனிவேலுவின் தீவிர ஆதரவாளர் எம்.எஸ். மகாதேவன் சன்னாசி என்பதால், அடுத்துவந்த டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியன் தரப்பு இவரைப் புறக்கணித்ததாகத் தெரிகிறது.

2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, கட்சித் தேர்தலில் மகாதேவன் தொகுதித் தலை-வருக்கு போட்டியிட முடியாத அளவிற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

மகாதேவன், மஇகா உறுப்பினர் பட்டியலி-லேயே இடம்பெற வில்லை என்று கட்சி ஒதுக்கியதால், சங்கடமடைந்த மகாதேவன், அரசியலிலிருந்தே ஒதுங்க ஆரம்பித்தார்.

அதேவேளை, 2018 மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், டான்ஸ்ரீ சுப்ரா நிறுத்திய பன்னீர்செல்வம் பிச்சைமுத்து, பிகேஆர் வேட்பாளர் க.சாமிநாதனிடம் 307 வாக்கு வேறுபாட்டில் தோல்வியைத் தழுவியது, டாக்டர் சுப்ராவிற்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது, அப்போது;

அடுத்தடுத்த காலக்கட்டத்தில் டான்ஸ்ரீ சுப்ராவும் மகாதேவனும் பழைய அத்தி-யாயத்தை மறந்து கைகுலுக்கிக் கொண்டனர் என்பது வேறுகதை.

மகாதேவனுக்குமுன், மஇகா போட்டியிட்ட தொகுதி அசகான்; டத்தோ ஆர்.பெருமாள் 2008 தேர்தலில் வென்று மாநில ஆட்சிக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.

அவருக்குமுன் அசகான் தொகுதியை தொடர்ந்து வசப்படுத்தி வந்தவர் டத்தோ ஆர்.இராகவன். ‘மலாக்கா மஇகா என்றால் இராகவன்; இராகவன் என்றால் மலாக்கா மஇகா’ என்றொரு காலம் இருந்தது. துன் சாமிவேலுவிற்கு மிகவும் நம்பிக்கையான-வராக விளங்கிய இராகவனுக்குமுன், மலாக்கா மாநில மஇகா-விற்கு தலைமை ஏற்றிருந்தவர் டத்தோ அருணாசலம் நாராயணன்.

இவர் 1986, 1990 என இரு தேர்தல்களில் தெபோங் தொகுதியில் இருந்து மலாக்கா சட்டமன்றத்திற்கு தேர்வானார்.

மூன்றாவது முறையாக இவர் களம்கண்ட தொகுதி, அசகான்; அப்போதும் வெற்றி பெற்ற இவர், 1996 ஏப்ரல் மாதம் 28-ஆம் நாள், சாலையைக் கடந்தபோது விபத்திற்கு ஆளாகி அகால மரணமடைந்தார்.

அடுத்த இரு மாதங்களில்(1996 ஜூன்) நடைபெற்ற இடைத்தேர்தலில் ராகவன் களம் கண்டார், வென்றார்; 2008வரை டத்தோ ராகவன் பிடியில் அசகான் தொகுதி சிக்கி இருந்தது. தொடர்ந்து 3 முறை மாநில ஆட்சிக் குழுவில் இடம்பெற்று வந்தார்.

தற்பொழுது, மஇகா-விற்கு காடேக் சட்ட மன்ற தொகுதி மட்டும்தான் என்பது உறுதி-யாகி உள்ளது; இம்மாதத் தொடக்கத்தில் (செப்டம்பர் 07) மஇகா தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேசுவரன் சிரம்பானில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் மஇகா கூடுதலான தொகுதியை தேசிய முன்னணி தலைமையிடம் கேட்குமா என்று ஒரு செய்தியாளர் வினவியபோது, ‘அந்த நிலையிலா மஇகா இப்போது இருக்கிறது?’ என்பதை சொல்லாமல் சொல்லி சமாளித்தார் விக்னேசுவரன்.

அதைவிட, இன்னொரு செய்தியாளர் முன்வைத்த வினாவினால், மிகவும் நெளிந்தார் விக்னேசுவரன். காடேக் தொகுதியில் வேட்பாளரை மாற்றுவீர்களா என்று சம்பந்தப்பட்ட செய்தியாளர் கேட்டபொழுது, பதில் சொல்லும் வகையறியாமல் சங்கடப்பட்டார் விக்னேசுவரன்; அருகில் அமர்ந்திருந்த டத்தோ பி.சண்முகமும் நெளிந்தார்; வளைந்தார்; அவரின் முகபாகம் என்னவோ போலானது.

இப்பொழுது, மலாக்கா மாநிலம் முழுவதும் நடராசன் செல்லப்பா சுற்றிவரும் நிலையில், ஒய்.பி. சண்முகத்தின் மனநிலை என்னவாக இருக்கும் என்று குறிப்பிடத் தேவையில்லை.

அதேவேளை, அரசியலில் கடைசி நேரத்தில்-நிமிடத்தில்கூட எதுவும் நடக்கலாம்; அப்படி ஏதும் அதிசயம் நடந்து, பி.சண்முகமே மீண்டும் களம் கண்டாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

ஒன்றுமட்டும் உறுதியிலும் உறுதி..! மலாக்கா சட்டமன்றத்தின் நிகழ்கால தவணையின் நாட்கள் எண்ணப்பட்டுகின்றன.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை