Friday, September 18, 2026

பொன்விழா ஆண்டில் இளையராஜாவின் இசைப் பயணம்: -பெட்டாலிங் ஜெயாவில் இசை நிகழ்ச்சி

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை முன்னிட்டு, ADR Music நிறுவனம் சார்பில் ‘இசைத் தமிழ்க்கோர் மணிமகுடம்’ என்னும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலை உணர்வுடன் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அலை ஓசை டாக்டர் அப்பு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பெட்டாலிங் ஜெயா சிவிக் மண்டபத்-தில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் சுமார் 300 இசைக் கலைஞர்-கள் கலந்து கொள்ளவுள்ளனர். நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை மதிய உணவு வழங்கப்படுவதுடன், தொடர்ந்து மாலை 7:00 மணி வரை இசை நிகழ்ச்சி நடைபெறும்.

மலேசியாவைச் சேர்ந்த 60 பாடகர்கள் இளையராஜாவின் படைப்புகளை வழங்கவுள்ளதுடன், 18 இசைக் கருவிக் கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கவுள்ளனர்.

ஏறக்குறைய 1,000 பேர் பங்கேற்கும் வகை-யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி பொதுமக்களுக்கு இலவசமாக நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பாடகர் எம்.எஸ். பிரிட்டோ இதன் தொடர்பில் கூறு-கையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது தமக்கு பெருமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக இளையராஜாவின் பாடல்களை பாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த அற்புதமான இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மேலும், மலேசியாவின் பல்வேறு உள்ளூர் கலைஞர்களை ஒரே மேடையில் காணவும், அவர்களின் குரல்களை கேட்டு ரசிக்கவும் இந்த நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெயதீஸ் குமார் கூறுகையில், இளைய ராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்திற்கு வழங்கப்படும் மரியாதையாகவே இந்த இசை நிகழ்ச்சியை தாம் கருதுவதாகத் தெரிவித்தார்.

SD Harmoni Restoran உரிமையாளர் ஷர்மிலா, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். அற்புத-மான இந்நிகழ்ச்சிக்கு தமது முழுமையான ஆதரவு இருப்பதாகவும், பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சிந்து பைரவி இசைக்குழுவின் தலைவர் அசோகன் கூறுகையில், மலேசிய இசைத் துறையில் அலை ஓசை டாக்டர் அப்பு ஒரு முக்கியமான இசைக் கலைஞர் எனக் குறிப்பிட்டார். குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை மிகத் தெளிவாகவும் சிறப்பாக-வும் இசைக்கக்கூடிய திறமை அப்புவுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இசையின்மீது அதிக ஈடுபாடு கொண்ட டாக்டர் அப்பு, இளையராஜாவின் இசைக் கருவி அமைப்புகளின் நுணுக்கங்களை உள்வாங்கி, அவற்றை இந்த நிகழ்ச்சியிலும் பயன்படுத்தியுள்ளதாக அசோகன் தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்-டாடும் வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி-யில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொண்டு உள்ளூர் கலைஞர்களின் இசைப் படைப்புகளை ரசிக்கலாம்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை