
மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். ராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ ச்சிங் இன்று மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து நலம் விசாரித்தார்.
பி.ஆர். ராஜனின் துணைவியார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்தசா சந்திப்பில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் செ வே முத்தமிழ் மன்னன் மற்றும் பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல், மருத்துவமனை சிகிச்சை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
காசேக் ஹவானா நிதி உதவி திட்டத்தின்கீழ் இன்று மேலும் 3,000 வெள்ளி சிகிச்சை நிதியாக ராஜன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற ஊடகத்தார் சந்திப்பின்போது துணை அமைச்சருக்கும் பெர்னாமா நிறுவனத்திற்கும் முத்தமிழ் மன்னன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



