
வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் கூட்டரசுப் பிரதேச மாநிலத்தில் விலாயா மஇகாவுக்கு கண்டிப்பாக ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற விலாயா மாநில மஇகா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கூட்டரசுப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாடாளு மன்ற தொகுதியில் போட்டியிட மஇகா தயாராக இருக்கிறது.
அதே சமயம் விலாயா மாநில மஇகாவுக்கு ஒரு செனட்டர் பதவியும் வழங்கப்பட வேண்டும். மேலும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் வாரிய உறுப்பினர் பதவியும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த தேர்தலில் பத்து நாடாளுமன்ற தொகுதியில் ம இகா போட்டியிட்டது. இம்முறை பத்து அல்லது செத்தியா வங்சா தொகுதியை அடையாளம் கண்டுள்ளோம்.
மேலும் பொதுத் தேர்தலை சந்திக்க விலாயா மாநில மஇகா தயார் நிலையில் இருப்பதாக விலாயா மாநில மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன், ஆண்டு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.


