Saturday, October 31, 2026

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்: 6 தொகுதிகளில் நான்முனைப் போட்டி: -28 தொகுதிகளில் 79 வேட்பாளர்கள் போட்டி!

மலாக்கா மாநிலம், 16வது சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 79 வேட்பாளர்கள் 28 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது 2021 தேர்தலுடன் ஒப்பிடும்போது குறைவான வேட்பாளர்கள் களம்காணும் போட்டியாகும்.

அந்தத் தேர்தலில் 28 தொகுதிகளுக்கு 112 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.

கூட்டணி வாரியான வேட்பாளர் எண்ணிக்கை:
*பக்காத்தான் ஹராப்பான் (PH) – 24;
•பாரிசான் நேஷனல் (BN) – 23
•பெர்சாமா – 16
•பெர்சத்து – 7
•பெரிக்காத்தான் நேஷனல் (PN) – 5
•புத்ரா – 1
•சுயேட்சைகள் – 3

பாலின அடிப்படையில்
•ஆண்கள் – 65
•பெண்கள் – 14

போட்டி நிலவரம்:
•நேரடி (இருமுனை) போட்டிகள் – 11
•மும்முனைப் போட்டிகள் – 11
•நான்குமுனைப் போட்டிகள் – 6
Gadek, Kelebang, Pengkalan Batu, Ayer Keroh, Bukit Katil மற்றும் Bemban ஆகிய தொகுதிகளில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.

வயதில் மூத்த மற்றும் இளைய வேட்பாளர்கள்
•மூத்தவர்: PH வேட்பாளர் மொஹமட் ஜாஃபர் (66 வயது), Telok Mas தொகுதி.
•இளையவர்: PH வேட்பாளர் முக்லிசுல் முபின் ஜுலாசாஃபியா (24 வயது), Kuala Linggi தொகுதி.

வாக்காளர்கள் மற்றும் வாக்குப்பதிவு:
மலாக்காவில் 687,697 தகுதியான வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையம் நவம்பர் 14-ஐ வாக்குப்பதிவு நாளாகவும், நவம்பர் 10-ஐ முன்கூட்டிய வாக்குப்பதிவு நாளாகவும் நிர்ணயித்துள்ளது.

2021 தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த முறை வேட்பாளர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால், மலாக்கா மாநிலத் தேர்தல் களம் ஒப்பீட்டளவில் குறைந்த நெரிசலுடன் காணப்படுகிறது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை