Monday, November 2, 2026

மஸ்ஜிட் இந்தியாவில் 40-ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டம்!

வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்குவது பாராட்டுக்குரியது; ஏ.ஜி.அசோகனுக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் பாராட்டு!

கோலாலம்பூர், நவ.1-
மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் தீபாவளிக் கொண்டாட்டம், நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

மஸ்ஜிட் இந்தியாவில் ஆண்டுதோறும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுவதைக் காண்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

மஸ்ஜிட் இந்தியாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தானும் தனது நண்பர்களும் இணைந்து இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தைத் தொடங்கியதாகக் கூறிய அவர், அன்றைய காலகட்டத்தில் இந்தப் பகுதியில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வந்ததாகவும் நினைவுகூர்ந்தார்.

தாங்கள் தொடங்கிய இந்த முயற்சி இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது. காலங்கள் மாறினாலும் நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் ஒருபோதும் கைவிட்டுவிடக் கூடாது. அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது நம் அனைவரது பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தீபாவளியைக் கொண்டாடுவதுடன் நின்றுவிடாமல், இந்நிகழ்ச்சியின் வாயிலாக வசதி குறைந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான தீபாவளி உதவிப் பொருட்களை வழங்குவது வரவேற்கத்தக்க செயலாகும் என்றார்.

இத்தகைய சமூகநலப் பணிகளை முன்னெடுத்து வரும் ஏ.ஜி.அசோகனுக்குத் தனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்ட டத்தோஸ்ரீ எம்.சரவணன், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை