Monday, November 2, 2026

பத்துமலை ‘தர்ம சாஸ்தா’ அன்புக் கரங்கள் சார்பில்-350 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு!

பத்து மலை வட்டாரத்தில் வசிக்கும் 350 இந்தியக் குடும்பங்களுக்கு தர்ம சாஸ்தா அன்புக் கரங்கள் அமைப்பின் சார்பில் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

அமைப்பின் தலைவர் எஸ். மருதையா தலைமையில் நடைபெற்ற தீபத் திருநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், பத்து மலை வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட எஸ். மருதையா, ஒவ்வோர் ஆண்டும் ஏழை மற்றும் தேவையுடைய குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்த முயற்சிக்கு பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, டத்தோஸ்ரீ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பிரகாஷ், கோம்பாக் மஇகா தலைவர் கோபி, டத்தோ பாலமுருகன், செலாயாங் மாவட்ட நகராண்மைக் கழக உறுப்பினர் தேவா உள்ளிட்டோர் வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு வகைகளில் உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் அமைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், எதிர்காலத்தில் இதைவிடப் பெரிய அளவில் தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை