Tuesday, November 3, 2026

சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் வெள்ளி விழா!

மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் சங்கம்-மிண்டாஸின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்வும் கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் 55 ஆம் ஆண்டு விழாவும் அடுத்த மாதம் 30 ஆம் நாள் மூன்று மணி அளவில் ஒருசேர நடைபெற இருக்கிறது என்று மிண்டாஸ் அமைப்பின் தலைவர் ஆர் ராஜசேகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பத்துமலை ஷெங்கா மண்டபத்தில் நடைபெற உள்ள இந்த விழாவில் சிறப்பு பிரமுகராக மனித வளத்துறை யின் மேனாள் அமைச்சர் வி. சிவக்குமார் கலந்து கொள்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் இருந்து சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் இந்த இரட்டை விழா, சிகை அலங்கரிப்புத் தொழிலில் மேன்மையையும் நாகரிக சமுதாயத்தில் இந்த தொழிலின் பங்களிப்பு பற்றியும் எடுத்துரைக்கும் என்று ராஜசேகரன் மேலும் தெரிவித்தார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை