Wednesday, November 4, 2026

ஊடகத்தார் உறவுப்பாலத்தினர்: -அமைச்சர்

அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் உறவுப்பாலமாக பத்திரிகையாளர்கள் விளங்குகின்றனர் என்று
அமைச்சர் கோபிந்த் சிங் புகழாரம் சூட்டினார்.

அவர்களின் சேவைகளை நாம் என்றென்றும் போற்ற வேண்டும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக்கொண்டார்.

நினைவில் வாழும் தன் தந்தை கர்ப்பால் சிங் சில வழக்குகள் சம்பந்தமாக அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துவர். ஏனெனில் சட்டத்தில் நிறைய விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதனால் சில நேரங்களில் பத்திரிகையாளர்கள் என் தந்தையை சந்திக்க வருவார்கள்.

அதனால் பத்திரிகையாளர்கள் எங்கள் குடும்பத்துடன் நீண்ட கால நட்பினை கொண்டிருக்கின்றனர் என்றார்.

இந்நிலையில் மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட வேளையில் டிஜிட்டல் அமைச்சின்வழி பத்திரிகையாளர் சங்கத்திற்கு 30,000 ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக பலத்த கரகொலிக்கு மத்தியில் கோபிந்த் சிங் தெரிவித்தார்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் ஷெங்கா மண்டபத்தில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடந்தேறியது

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை